RBI/2007-08/119
DBOD.No.Leg.BC.28/09.07.05/2007-0-8
ஆகஸ்ட்
22, 2007
அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து
வணிக
வங்கிகள் / அகில இந்திய
நிதி
நிறுவனங்கள் (பிராந்திய
கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்,
கடன்
கொடுப்பவர்களுக்கான நியாயமான
பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளுக்கு
வழிகாட்டுதல் –
கடன் ஒப்பந்த நகல் அளித்தல்
எங்களின் 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை
DBOD.leg.No.BC.104/09.07.002/2002-03ஐப்
பார்க்கவும். கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளை
வகுப்பது பற்றி வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்கள்குக்கும் அதில் சொல்லியிருந்தோம்.
2.
அச் சுற்றறிக்கை பத்தி 2(ii)(C)யின்
படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும், கடன் வசதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் /
வரையறைகள் ஆகியவைகளை வகுக்கும்போது, கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் வாங்குபவரிடம்
நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதப்பட்டு வங்கி / நிறுவனத்தின்
அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும். இக் கடன் ஒப்பந்தத்தின்
நகலையும், அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும் கடன் வாங்குபவருக்கு வங்கி
நிறுவனம் அளிக்க வேண்டும் எனவும் அச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
3.
சில வங்கிகள், கடன் வாங்குபவர்கள் கேட்டால்தான் கடன் நகலைக் கொடுப்பதாக அறிகிறோம்.
கடன் ஒப்பந்த நகல், அதில் சொல்லபபட்ட இணைப்புகளின் நகல்கள் ஆகியவைகளைக் கொடுப்பாமல்
இருப்பது ஒரு நியாயமற்ற பழக்க வழக்கமாகவே கருதப்படும். மேலும், வங்கிக்கும் கடன்
வாங்கியவருக்கும் இடையே சச்சரவு / தகராறுகளை எழுப்பவும் இது வழி கோலும்.
4.
எனவே கடன் ஒப்பந்த நகலையும் அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும், கடன்
வாங்குபவர் அனைவருக்கும், கடன் அளிக்கப்படும் போதே, வங்கி / நிறுவனங்கள் கொடுக்க
வேண்டும்.
அன்புடன்
பிரசாந்த் சரன்
தலைமைப்
பொது மேலாளர் (பொறுப்பு)
|