சுத்த நோட்டுக் கொள்கை – நோட்டுக் கட்டுகளைக் கட்டப் பயன்படும் (bands) – ஸ்டிக்க்ரை உபயோகப்படுத்துதல்
DCM (NPD)
No.317/09.39.00/2003-04 அக்டோபர் 11, 2003
தலைவர்/நிர்வாக இயக்குநர்
அனைத்து பொது/தனியார் துறை
அயல்நாட்டு/கூட்டுறவு/பிராந்திய கிராமப்புற வங்கிகள
அன்புடையீர்,
சுத்த நோட்டுக் கொள்கை – நோட்டுக் கட்டைக் கட்டப்
பயன் படும் வளயங்கள் (bands) – ஸ்டிக்கரை உபயோகப்படுத்துதல்
2002 செப்படம்பர் 13 தேதியிட்ட DCM (Plg) No.474/10.36.00/2002-03 சுற்றறிக்கையில் காகிதத்தாலான வளையங்களையே நோட்டுக் கற்றைச் சுற்றிக் கட்டப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறை கூறியிருந்தோம்.
2. சுத்த நோட்டுக் கொள்கையை அமல் படுத்தும் வகையில் வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பழைய நோட்டுகள் பின் அடிக்கப்படாமல் இருப்பதை பாராட்டும் பொழுது, சில் வங்கிகள் நோட்டுக் கட்டின் மேல் வைக்கும் லேபிளை முன் அல்லது கடைசி நோட்டில் ஒட்டியும், அல்லது ஸ்டிக்கர் ஒட்டியும் அனுப்புவதாக அறிகிறோம். ஸ்டிக்கர் லேபிள் ஒட்டிய நோட்டிலிருந்து அவைகளைப் பிரிக்கும் போது நோட்டுகள் சேதமடைந்து விடுகின்றன. நோட்டுகளைப் பரிசோதித்து எண்ணி பிரித்து இயங்கும் அதி நவீன CVPS இயந்திரங்களில் இத்தகைய பசை தடவிய/ஒட்டும் நோட்டுகளை பரிசோதிக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே பணக்கருவூலங்கள் உள்ள கிளைகள், மற்றக் கிளைகள் அனைத்திற்கும் பசை தடவிய ஒட்டும் லேபிளையோ, பாண்டுகளையோ உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்துங்கள். நோட்டுக் கற்றில் காகிதத்தாலான வளயங்களே பயன்படுத்தப்பட வேண்டும். பசை தடவி ஒட்டப்பட்ட லேபில் / ஸ்டிக்கர் உடைய நோட்டுக் கட்டுகள வங்கிக் கிளைகளுக்கே திருப்பி அனுப்பப்படும். அத்தொகை அவர்கள் கணக்கில் கழிக்கப்படும்.
3. பின் அடித்த நோட்டுக் கட்டுகளை பின் அடிக்காத கட்டுகளோடு கலந்து சில வங்கிக் கிளைகள் அனுப்புகின்றன. 1949 வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 35Aயின் படி 2001 நவம்பர் 7 அன்று வங்கிகளுக்கு இட்ட கட்டளையை மீறும் செயலாக இது கருதப்படும். ஆணையை மீறி நடக்கும் வங்கிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும். பின் அடிக்காத நோட்டுக் கட்டுகளையே ரிசர்வ் வங்கிக்கோ அல்லது பணக்கருவூலங்கள் உள்ள கிளைகளுக்கோ அனுப்பச் சொல்ல மீண்டும் ஒருமுறை அனைத்து கிளைகளையும் அறிவுறுத்த வேண்டும்.
கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
அன்புடன்
V.R. கெய்க்வார்டு
தலைமைப் பொது மேலாளர்
|