DBOD. No. AML. BC. 28/14.01.001/2005-06 ஆகஸ்ட் 23, 2005
அனைத்து அட்டவணைக்குட்பட்ட
வணிக வங்கிகளுக்கும்
(வட்டார
கிராம
வங்கிகள்
நீங்கலாக)
அன்புடையீர்,
“உங்கள்
வாடிக்கையாளரை
தெரிந்து
கொள்ளுங்கள்”(KYC)
–
வழிகாட்டுநெறிகள்
மேற்கண்ட
தலைப்பில் 2004ம் ஆண்டு
நவம்பர் 29ம்
தேதியிட்ட DBOD.No.AML.BC. 58/14.01.001/2004-05 சுற்றறிக்கையைப்
பார்க்கவும்.
மேற்கண்ட சுற்றறிக்கையின்
அடிப்படையில்
ஒரு கணக்கைத்
தொடங்கும்போது,
வாடிக்கையாளரை
இனங்கண்டு
கொள்ளும்
நடைமுறையையும்,
வாடிக்கையாளரை
ஏற்றுக்கொள்ளும்
கொள்கையையும்
வங்கிகள்
உருவாக்கிட
வேண்டும்.
எதிர்நோக்கும்
அபாயநேர்வுக்கு
ஏற்றவாறு
வாடிக்கையாளர்களை
குறைந்த,
நடுத்தர,
அதிக
அபாயநேர்வுள்ள
வகைகளாக
வங்கிகள்
பிரித்திடவேண்டும்.
வழிகாட்டுநெறிகள்
வலியுறுத்துவது
என்னவென்றால்
சுற்றறிக்கையின்
இணைப்பு IIல்
பட்டியலிடப்பட்ட
ஆவணங்களின் மூலமாக
வாடிக்கையாளரின்
அடையாளத்தையும்
முகவரியையும்
வங்கிகள்
சரிபார்த்திட
வேண்டும்.
2.
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள
சுற்றறிக்கையின்படி
அடையாளம் காண
மற்றும்
முகவரிக்கு அத்தாட்சி
இவைக்கான
தேவைகளின்
விவரங்களில்
வளைந்துக்
கொடுக்கும்
தன்மை
இருந்தாலும்
பெரும்பாலானவர்கள்,
அதிலும்
கிராம
மற்றும்
நகரப்பகுதிகளைச்
சேர்ந்த குறைந்த
வருவாய்
பிரிவைச்
சேர்ந்தவர்கள்
அடையாளம்
மற்றும்
முகவரிக்கான
ஆவணங்களைக்
கொடுத்து
வங்கிகளைத்
திருப்தி
செய்ய முடியவில்லை. இது,
வங்கிசேவைகளை
அவர்கள் அணுக
முடியாத
நிலைக்கும்
மற்றும்
நிதிக்களத்திலிருந்து
அவர்களின்
வெளியேற்றத்திற்கும்
வழிவகுத்துவிடுகிறது.
அதற்கேற்ப
கீழ்க்கண்ட
நபர்கள்
கணக்கைத்
தொடங்கும்போது
கே.வொய்.சி.(KYC) முறைமைகளை
மேலும்
தளர்த்துவது
என்று முடிவு
செய்யப்பட்டது அதாவது
எவர் தன்னுடைய
அனைத்து கணக்குகளையும்
சேர்த்து ஒரு
வருடத்தில் ரூபாய்
ஐம்பதாயிரத்திற்கு
(ரூ.50,000)
மேற்படாமல்
நிலுவையாக
வைத்துள்ளனரோ
அவர்களும்
மொத்த வரவுக்கணககு,
எல்லாக்
கணக்குகளையும்
சேர்த்து ரூபாய்
ஒரு
லட்சத்திற்கு
(ரூ. 1,00,000) மிகாமல்
வைத்துள்ளனரோ
அவர்களும் அடங்குவர்.
3. 2004
நவம்பர் 29
தேதியிட்ட
ரிசர்வ்
வங்கி சுற்றறிக்கையின்
இணைப்பு
IIல்
குறிப்பிடப்பட்டுள்ளபடி
கணக்கைத் தொடங்க
நினைக்கும்
ஒரு நபர்
ஆவணங்களைக்
காண்பிக்க
முடியாவிட்டால்
மேலே
உள்ளதில்
பத்தி 2ல்
விவரித்தபடி
வங்கிகள்
கணக்கைத்
தொடங்கிடலாம்.
கீழ்க்
கண்டவைகளுக்குட்பட்டு
a.
முழு
கே.வொய்.சி.(KYC)
முறைமைகளுக்குட்படுத்தப்பட்ட
மற்றொரு
கணக்குதாரரின்
அறிமுகம்.
அறிமுகப்
படுத்துபவரின்
கணக்கு
வங்கியில்
ஆறுமாதங்கள்
ஆனதாக இருந்து
திருப்திகரமான
பரிவர்த்தனைகளை
காண்பிக்க
வேண்டும்.
கணக்கு
துவங்கும்
வாடிக்கையாளரின்
புகைப்படம்
மற்றும்
முகவரி
ஆகியவைகளை
அறிமுகப்
படுத்துபவர்
அத்தாட்சி செய்யவேண்டும்.
a.
b.
வங்கி
திருப்தியுறும்
விதத்தில்
வாடிக்கையாளரின்
அடையாளம்
மற்றும்
முகவரிக்கு
வேறு ஏதேனும்
சாட்சி
இருந்தாலும்
சரி.
4.
மேற்கண்டவாறு
கணக்குத்
தொடங்கப்படும்போது
வாடிக்கையாளருக்கு
தெரியப்படுத்த
வேண்டியது
என்னவென்றால்
ஏதோ ஒரு
நேரத்தில் வங்கியிலுள்ள
அவரது
கணக்கில்
(ஒட்டு
மொத்தமாக )
நிலுவைத் தொகை
ரூபாய்
ஐம்பதாயிரத்தைத்
தாண்டினாலோ அல்லது
கணக்கில்
மொத்த வரவு
ரூபாய் ஒரு
லட்சத்தை
தாண்டினாலோ
முழு
கே.வொய்.சி.(KYC)
முறைமைகளும்
முடிக்கும்வரை
வேறு எந்தப் பரிவர்த்தனைகளும்
அனுமதிக்கப்பட
மாட்டாது.
வாடிக்கையாளருக்கு
அசௌகரியம்
ஏற்படுத்த
வேண்டாம் என்று
வங்கி
வாடிக்கையாளரின்
நிலுவைத்
தொகை ரூபாய்
நாற்பதாயிரத்தை
(ரூ. 40,000)
எட்டும்போதும்
அல்லது ஒரு
வருடத்தில்
மொத்த வரவு
ரூபாய்
எண்பதாயிரத்தை
எட்டும்போதும்
கே.வொய்.சி.(KYC)
முறைமைகளை
நடத்த
தேவையான
ஆவணங்களை
சமர்ப்பித்திடவேண்டும்
என
அறிவித்திட
வேண்டும்.
அப்படி
செய்யாவிடில்
எல்லாக்
கணக்குகளையும்
சேர்த்து
நிலுவைத்
தொகை ரூபாய்
ஐம்பதாயிரத்தை
(ரூ.50,000)
தாண்டும்போது
அல்லது ஒரு
வருடத்தில்
கணக்குகளில்
மொத்த வரவு,
ரூபாய் ஒரு
லட்சத்தை (ரூ. 1,00,000)
தாண்டினாலும்
கணக்கின்
பரிவர்த்தனைகள்
உடனே
நிறுத்தப்படும்.
5. DBOD. No. AML.
BC. 23/14.01.064/2005-06, 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 2,
தேதியிட்ட
சுற்றறிக்கையின்படி
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட
பகுதிகளில்
இருப்பவர்கள்
கணக்குத்
தொடங்கப்படும்போது
அரசு அளிக்கும்
நிவாரண
மானியத்தை
வரவு
வைத்துக்கொள்ள
வசதியாக
அவர்களுக்கு
கே.வொய்.சி.(KYC)
தரத்தை
வங்கிகள்
குறைத்திட
வேண்டும்.
சுற்றறிக்கையின்
விதிகளின்படி
தொடங்கப்பட்ட
மற்ற
கணக்குகளுக்கு
சமமாக இந்தக்
கணக்குகளையும்
நடத்திட
வேண்டும். எனினும்
அம்மாதிரி
கணக்குகளில்
அதிகபட்ச
நிலுவைத்
தொகை நிவாரண
மானியமாக
அரசிடமிருந்து
வருவது
அல்லது
ரூபாய்
ஐம்பதாயிரம்
(ரூ.50,000) எது
அதிகபட்சமோ
எடுத்துக்
கொள்ளப்படும்.
ஆனால் நிவாரண
மானியத்தின்
தொடக்க வரவு,
மொத்த வரவைக்
கணக்கிடுவதில்
ஏற்கப்பட
மாட்டாது.
6.
வங்கிகள்
இவ்விஷயத்தில்
தங்கள்
கிளைகளுக்கு
தகுந்த
உத்தரவுகள்
பிறப்பித்து
உடனடி செயலாக்கத்திற்கு
வகை செய்ய
வேண்டும்.
உங்கள்
நம்பிக்கைக்குரிய
(பிரஷாந்த்
சரண்)
தலைமை
பொது மேலாளர்