Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (253.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 07/02/2018
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (ஜி.எஸ்.டி.) கீழ் பதிவு செய்யப்பட்ட MSME கடனாளிகளுக்கான நிவாரணம்

RBI/2017-18/129
DBR.No.BP.BC.100/21.04.048/2017-18

பிப்ரவரி 07, 2018

இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும்
வங்கிசாரா நிதி நிறுவனங்கள்

அன்புடையீர்

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகளின் (ஜி.எஸ்.டி.) கீழ்
பதிவு செய்யப்பட்ட MSME கடனாளிகளுக்கான நிவாரணம்

தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் (NBFCs), கடன் கணக்கை முறையீட்டு நெறிமுறைகளின் படி முறையே 90 நாட்கள் மற்றும் 120 நாள் அடிப்படையில் செயல் இழந்த சொத்துக்களாக (NPA) வகைப்படுத்துகின்றது.‘ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்வதன் மூலம் வணிகத்தை முறைப்படுத்துவது இடைக்கால கட்டத்தில் சிறிய நிறுவனங்களின் பணப்புழக்கங்களை மோசமாக பாதித்துள்ளது, ‘இதன் விளைவாக வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி.க்களுக்கு திருப்பிச் செலுத்தும் கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் உள்ளன’ என்று கோரப்பட்டுள்ளது. ஒறு முறைசாரா வர்த்தக சூழலுக்கு மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வங்கிகளும், NBFCs-களும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு (MSMED) சட்டத்தின் கீழ், நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவன சட்டம் 2006-ன்படி, கடன் வாங்கியவர்களுக்கு, வங்கிகள் மற்றும் NBFC-களின் புத்தகங்களில் தொடர்ந்து ஒரு நிலையான / தரமான சொத்து என பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு வகைப்படுத்தப்படவேண்டும்.

  1. கடன் வாங்கியவர் ஜனவரி 31, 2018 அன்று GST விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  2. வங்கிகள் NBFC-களின் மொத்த கடன் வழங்கும் வரம்பு, நிதி அல்லாத அடிப்படையிலான வசதிகள் உட்பட கடனாளிக்கு ஜனவரி 31, 2018-ல் 250 பில்லியனுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .

  3. ஆகஸ்டு 31, 2017-ல் கடன் வாங்கியவரின் கணக்கு நிலையானதாக இருக்க வேண்டும் .

  4. செப்டம்பர் 1, 2017-ம் ஆண்டிற்குள் கடனாளியின் தவணை கடந்த தொகை மற்றும் செப்டம்பர் 1, 2017 மற்றும் ஜனவரி 31, 2018-க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கடனாளர் செலுத்தும் பணம் 180 நாட்களுக்கு மிகாமல் அந்தந்த குறிப்பட்ட தேதிகளுக்குள் செலுத்தப்படவேண்டும்.

  5. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் NPA என வகைப்படுத்தாத கடன்களுக்கு எதிராக வங்கிகள் / NBFC-க்கள் 5% முன் ஏற்பாடு உருவாக்கவேண்டும். 90 / 120 நாள் விதிமுறைக்கு அப்பாற்பட்டு எந்த்த் தொகையும் தவணை கடந்ததாக இல்லையெனில், இந்தக் கணக்கைப் பொறுத்தவரையில், அது திருப்பப்படலாம்.

  6. கூடுதல் கால அளவு சொத்து வகைப்பாட்டின் நோக்கத்திற்காகவே அன்றி வருவாய் அங்கீகாரத்திற்காக அல்ல, அதாவது, கடனாளியின் வட்டி 90 / 120 நாட்களைக் கடந்து விட்டால், அதே தொகை, சேரும் அடிப்படையில் அங்கீகரிக்கப்படமாட்டாது.

இங்ஙனம்
ஒப்பம்
(S. K. கர்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்