RBI/2017-18/105
DPSS CO. PD. No. 1633/02.14.003/2017-18
டிசம்பர் 06, 2017
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரிகள்
கிராமப்புற … வங்கிகள் உட்பட அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுள் /
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /
கொடுப்பனவு வங்கிகள் மற்றும் சிறிய நிதி வங்கிகள் /
அனைத்து அட்டை நெட்வொர்க் வழங்குநர்கள்
அன்புடையீர்
கடன் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகச் சலுகை விகிதம் (MDR) பகுத்தறிதல்
இந்திய ரிசர்வ் வங்கியின் 2017-18 ஐந்தாவது இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் பணக் கொள்கை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கடன் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கான வர்த்தகச் சலுகை விகிதம் (MDR) பற்றிய திருத்தப்பட்ட கட்டமைப்பிற்கான மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் பற்றிய அறிக்கையின் பாரா 1–ஐப் பார்க்கவும்.
2. கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தக் கூடிய அதிகபட்ச MDR இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் 28, 2012 தேதியிட்ட சுற்றறிக்கை DPSS.CO.PD.No.2361/02.14.003/2011-12-ல் குறிப்பிடப்பட்டது, டிசம்பர் 16, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DPSS.CO.PD.No.1515/02.14.003/2016-17-ல் திருத்தப்பட்டுள்ளது.
3. “வரைவுச் சுற்றறிக்கை – கடன் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கான வர்த்தகச் சலுகை விகித (MDR) பகுப்பாய்வு“ என்பது பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், பொரும்பாலான வர்த்தகர்கள், குறிப்பாக சிறிய வர்த்தகர்கள், கடன் அட்டை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான வர்த்தகத்தின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய இரட்டை நோக்கங்களைக் கருத்தில் கொண்டும், பின்வருபவனவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் அட்டைகளுக்கான MDR-ஐ நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விற்பனையின் அடிப்படையில் வர்த்தகர்களை வகைப்படுத்துதல்
-
QR-குறியீட்டுப் பரிவர்த்தனைகளுக்கு ஒரு வேறுபட்ட MDR-ஐ ஏற்றுக்கொள்ளும்
-
“அட்டை உள்ள”, மற்றும் “அட்டை இல்லாத” பரிவர்த்தனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட MDR-ல் அதிக உச்சவரம்பு என்ன என்பதைக் குறிப்பிடுவது
4. அதன்படி டெபிட் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச MDR கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வ. எண் |
வர்த்தக வகை |
டெபிட் அட்டைகளுக்கான பரிவர்த்தனைச் சலுகை விகிதம் (MDR) (பரிவர்த்தனை மதிப்பின் சதவிகிதம்) |
ஆன்லைனில் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விற்பனை மையம் |
QR குறியீடு அடிப்படையிலான அட்டை ஏற்றுக்கொள்ளும் உள்கட்டமைப்பு |
1. |
சிறிய வர்த்தகர்கள் (முந்தைய நிதியாண்டில் விற்பனை அளவு 20 லட்சம் வரையில்) |
0.40% மிகாமல் (பரிவர்த்தனைக்கு ரூ. 200 என்ற MDR உச்ச வரம்பு) |
0.30% மிகாமல் (பரிவர்த்தனைக்கு ரூ. 200 என்ற MDR உச்ச வரம்பு) |
2. |
மற்ற வர்த்தகர்கள் (முந்தைய நிதியாண்டில் விற்பனை அளவு 20 லட்சதிற்கு மேல்) |
0.90% மிகாமல் (பரிவர்த்தனைக்கு ரூ. 1000 என்ற MDR உச்ச வரம்பு) |
0.80% மிகாமல் (பரிவர்த்தனைக்கு ரூ. 1000 என்ற MDR உச்ச வரம்பு) |
5. MDR தொடர்பான எங்கள் செப்டம்பர் 01, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DPSS. CO. PD. No. 639/02.14.003/2016-17 மற்றும் ‘வியாபார கையகப்படுத்தல்‘-க்கு ஒரு வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையை வெளியிடுவது தொடர்பான மே 26, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DPSS. CO. PD. No. 2894/ 02.14.003 / 2015-16-. பார்க்குமாறு கோரப்படுகிரார்கள். வங்கிகளும் அங்கீகரிக்கப்பட்ட அட்டைக் கட்டண நெட்வொர்க்குகளும் கண்டிப்பாக மேற்கூறிய அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. . மேலும், வியாபார இடத்திலுள்ள அட்டை ஏற்றுதல் உள்கட்டமைப்பை நிறுவுகின்ற நிறுவனம்எதுவாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி MDR-ன் உச்ச வரம்பு மீறக்கூடாது என்று வங்கிகள் உறுதி செய்யவேண்டும்.
6. வங்கிகளால் ஆன்-போர்டு செய்யப்பட்ட வியாபாரிக்கள், டெபிட் கார்டு மூலம் பணம் போது வாடிக்கையாளர்களிடம் MDR கட்டணங்கள் பெறக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்துகின்றன.
7. மேலே உள்ள வழிமுறைகளை ஜனவரி 01, 2018 முதல் அமல்படுத்தலாம். இந்த அறிவுறுத்தல்கள் ஆய்வுக்கு உட்பட்டவை.
8. செலுத்துதல் மற்றும் தீர்வு முறைச் சட்டம் 2007 (2007 ஆம் ஆண்டின் 51-வது பிரிவு) 18-வது பிரிவுடன் சேர்த்து 10 (2) பிரிவின் கீழ் உத்தரவு வழங்கப்படுகிறது.
இங்ஙனம்
(நந்தா S. தவே)
தலைமைப் பொதுமேலாளர் (பொறுப்பு) |