Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (220.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/03/2018
முன்னுரிமைப் பிரிவு கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்

RBI/2017-18/135
FIDD.CO.Plan BC. No.18/04.09.01/2017-18

மார்ச் 01, 2018

தலைவர் / நிர்வாக இயக்குநர்
மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள்
அனைத்துப்பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்

அன்புடையீர்

முன்னுரிமைப் பிரிவு கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்

வங்கிகளுக்கு வழங்கப்பட்ட திருத்தப்பட்ட முன்னுரிமைத் துறை வழிகாட்டுதல்களை ஏப்ரல் 23, 2015 தேதியிட்ட சுற்ற்றிக்கை FIDD.CO.Plan BC.54/04.09.01/2014-15-ஐ தயவு செய்து பார்க்கவும். அதில் பாரா II (i)-ன் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கான கடன் துணை இலக்குகளை நிர்ணயிப்பது, 2017-ஆம் ஆண்டு மதிப்பாய்வு செய்த பிறகு 20க்கும் மேலை கிளைகள் உள்ள வெளிநாட்டு வங்கிகளுக்குப் பொருந்தும் என்றும், அதை 2018-ம் ஆண்டிலிருந்து அதை வழங்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2. அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட வங்கிகளின் முன்னுரிமைத் துறையின் கடன் விவரங்களை மதிப்பாய்வு செய்து, வங்கிகளுக்குள் ஒரு சீரான சரிசமமான முறைமையை உருவாக்குவதற்காக, நிதியாண்டு 2018-19-லிருந்து, வங்கியின் ANBC அல்லது CEOBE யில் (CEOBE, ANBC இவற்றில் எது அதிகமோ) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கடன் அளிப்பதற்கான துணை இலக்கு 8%, இருபது 20 மற்றும் அதற்கு மேல் கிளைகள் உள்ள வெளிநாட்டு வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும், 2018-19-ஆம் ஆண்டு முதல் சிறுதொழில் நிறுவனங்களுக்கான கடன் அளிப்பதற்காக துணை இலக்கு ANBC அல்லது CEOBE-ன் 7.50%, இருபது 20 கிளைகள் மற்றும் மேலே உள்ள வெளிநாட்டு வங்கிகளுக்கும் பொருந்தும்.

3. அதன்படி, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்புக்கு பின் நமது பொருளாதாதரத்தில் சேவைத் துறைக்கு அதிகரித்து வரும் முக்கியத்துடன் முன்னுரிமைப் பிரிவின் கீழ் வகைப்படுத்தலுடன் ரூ. 5 கோடி மற்றும் ரூ. 100 கோடி பொருந்தும் கடன் வரம்புகளை அகற்றவும் உத்தேசித்து வருகிறது. MSMED 2006-ஆம் ஆண்டுக்கான சட்டத்தின்படி, வரையறுத்தபடி சேவைகளை வழங்குவது அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள MSME-க்களின் அனைத்து வங்கிக்கடன்களும், எந்தவொரு கடன் வரம்பும் இல்லாமல் முன்னுரிமைப் பிரிவுக்கு தகுதி பெறும்.

இங்ஙனம்

(கௌதம் பிரசாத் போரா)
தலைமைப் பொதுமேலாளர் - பொறுப்பு

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்