Deputy Governor
வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கான புகார் குறைத் தீர்ப்பு திட்டம் 2018
அறிவிப்பு
Ref. CEPD. PRS. No. 3590/13.01.004/2017-18
பிப்ரவரி 23, 2018
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 19034-ன் 45L-ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துதல், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் உகந்த கடன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நாட்டினுடைய கடன் முறையை, அதற்குச் சாதகமாகக் கட்டுப்படுத்துவதற்காக, வைப்பு, கடன்கள், முன்பணம் மற்றும் பிற குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பான சேவைகளில் குறைபாடுபற்றி புகார்களை அளிப்பதற்காகவே ஒரு புகார் தீர்க்கும் வாரிய முறையை வழங்குவது அவசியமானதால், வரையறுக்கப்பட்ட வங்கிசாரா நிதிநிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் 45I(f) பிரிவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் பிரிவு 45IA-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட (அ) வைப்புகள் பெற அங்கீகரிக்கப்பட்டவை, (ஆ) வாடிக்கையாளர் இடை முகம்ஒரு பில்லியன் ரூபாய் அல்லது அதற்கும் மேலான சொத்துக்களின் அளவு, முந்தைய நிதியாண்டில் தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட சொத்துக்களின் அளவுடைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் 2018-க்கான குறை தீர்ப்பாளர் திட்டத்திற்கு உட்பட்டு, வங்கிசாரா நிதிநிறுவனங்கள் 2018-க்கான குறை தீர்ப்பாளர் விதிகளை பின் பற்ற வேண்டும்.
2. வங்கிசாரா நிதிநிறுவனம் (NBFC), உள்கட்டமைப்பு நிதிநிறுவனம் (NBFC-IFC), கோர் முதலீட்டு நிறுவனம் (CIC), உள்கட்டமைப்பு கடன்நிதி – வங்கிசாரா நிதிநிறுவனம் (IDF-NBFC) மற்றும் கலைக்கப்பட்ட NBFC – க்கு இத்திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது.
3. இத் திட்டம் வைப்புகளை ஏற்கும் வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு அமல் செய்யப்பட்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மீதமுள்ள அனைத்து வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு விரிவாக்கப்படும். இது ஆரம்பத்தில் நான்கு மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் நான்கு மெட்ரொக்களான சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் புதுதில்லி ஆகியவை அந்தந்தப் பகுதிகளிலிருந்து புகார்களைக் கையாள்வதுடன், நாட்டின் முழு வரம்பை உள்ளடக்கும்.. இந்த அலுவலகங்களில் அதிகார வரம்புப் பகுதி திட்டத்தின் இணைப்பு – 1-ல் குறிக்கப்பட்டுள்ளது.
4. இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ம் நாள் அமலுக்கு வரும்.
(B. P. கனுங்கோ)
|