RBI/2017-18/95
DGBA.GBD.No.1324/31.02.007/2017-18
நவம்பர் 16, 2017
அனைத்து முகமை வங்கிகள்
அன்புடையீர்
சரக்கு சேவை வரி (GST) வரவுசார்ந்த
பரிவர்த்தனைகளில் முகமை கமிஷன்
முகமை வங்கிகளால் மேற்கொள்ளப்படும் அரசாங்க வர்த்தக செயல்பாடு – முகமை கமிஷன் அளித்தல் குறித்த எங்களின் ஜூலை 01, 2017 தேதியிட்ட முதன்மைச் சுற்றறிக்கையின் பாரா.15ப் பார்க்கவும்.
2. ஜிஎஸ்டி கட்டமைப்பைச் செயல்படுத்தியபின், மேற்குறிப்பிட்ட
முதன்மைச் சுற்றறிக்கையின் 15-ஆம் பாராவை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட பாரா 15 பின்வருமாறு:
“முகமை வங்கிகள், மத்திய அரசு சார்ந்த பரிவர்த்தனைகளுக்குரிய கமிஷனுக்கான கோரிக்கைகளை, பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மத்திய கணக்குப் பிரிவு, நாக்பூருக்கும், மாநில அரசுசார்ந்த பரிவர்த்தனைகளுக்குரிய கமிஷனுக்கான கோரிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்திற்கும் சமர்ப்பிக்க வேண்டுவது அவசியமாகும். இருப்பினும், ஜிஎஸ்டி வரவுசார்ந்த பரிவர்த்தனைகள் தொடர்பான முகமை கமிஷன் கோரிக்கைகள் ரிசர்வ் வங்கியின் மும்பை பிராந்திய அலுவலகத்தில் மட்டுமே தீர்வு செய்யப்படும். அதன்படி, ஜிஎஸ்டி வசூலிக்க அதிகாரமளிக்கப்பட்ட முகமை வங்கிகள், இத்தகு பரிவர்த்தனைகள் தொடர்பான தங்களின் முகமை கமிஷன் கோரிக்கைகளை மும்பை மண்டல அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். முகமை வங்கிகளுக்குரிய முகமைக் கமிஷன் கோரிக்கைக்கான திருத்தப்பட்ட படிவங்கள், கிளை அதிகாரிகள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுண்ட்ண்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திடவேண்டிய சான்றிதழ்களின் தனித்தனி படிவங்கள் பின்னிணைப்பு-2-ல் கொடுக்கப்பட்டுள்ளன. வரவு வைக்கப்படவேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகை ஏதுமில்லை / வழக்கமான ஓய்வூதியம் வழங்கலில் தாமதம் ஏதுமில்லை / இவைகளில் நிலுவைகள் ஏதுமில்லை என்று நிர்வாக இயக்குநர் / அரசாங்க வணிகப் பொறுப்பிலிருக்கும் தலைமைப் பொதுமேலாளர் அளிக்கும் வழக்கமான சான்றிதழ்களோடு கூடுதலாக மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் அளிக்கப்படவேண்டும்.
3. மேற்குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைச் சுற்றறிக்கையில் உள்ள இதர அறிவுறுத்தல்களில் எந்தவித மாற்றமும் கிடையாது.
இங்ஙனம்
(பார்த்தா சௌத்ரி)
பொது மேலாளர் |