RBI/2006-07/325
DBOD.No.Leg.BC.78/09.07.005/2006-07 ஏப்ரல்
17, 2007
அட்டவணையிலுள்ள
அனைத்து வணிக
வங்கிகள்
(பிராந்தியக்
கிராம
வங்கிகள்
நீங்கலாக)
அன்புடையீர்,
பாதுகாப்பு
பெட்டக வசதியளித்தல்/
பாதுகாப்பாகப்
பொருட்களை
வைத்திருப்பது
–
பாதுகாப்பு
பெட்டகத்திற்குச்
செல்ல அனுமதி
-
பாதுகாப்பிற்குக்
கொடுத்த
பொருட்களை
திருப்பி
வழங்கல்
பொது
நலச்
சேவைக்கான
செயல்முறை
மற்றும் செயல்
நிறைவேற்ற
ஆய்வுக்குழு (CPPAPS) பாதுகாப்பு
பெட்டக
வசதியைப்
பயன்படுத்தும்
செயல்முறைகள்
எளிதாக
இருக்கும்
வண்ணம் சில
பரிந்துரைகளைச்
செய்தது. பாதுகாப்பு
பெட்டகம்
மற்றும் பாதுகாப்பிற்காகக்
கொடுக்கப்படும்
பொருட்கள்
பற்றிய
எங்களது அனைத்து
வழிகாட்டுதல்களையும்
நாங்கள் மறு
ஆய்வு செய்தோம். இதற்கு
முன்னர்
வெளியிட்ட எங்களது
வழிகாட்டு அறிவுரைகளைப்
புறம் தள்ளி
கீழே
குறிப்பிடப்பட்டுள்ள
வழிகாட்டுதல்கள்
அளிக்கப்படுகின்றன.
1.1
குறித்த
கால
வைப்புடன் பாதுகாப்பு
பெட்டக
அளித்தலை சம்பந்தப்படுத்துவது:
1.1
பாதுகாப்பு
பெட்டக
வசதியை
அளிப்பதை
குறித்த கால
வைப்பு அல்லது
வேறு எந்த
வைப்புடனோ
வங்கிகள் சம்பந்தப்படுத்துவது
தடைசெய்யப்பட
வேண்டிய ஒரு
பழக்கம்
என்று மேலே
சொன்ன குழு கூறுகிறது.
இக்கருத்தினை
நாங்கள் ஏற்றுக்
கொண்டு,
வங்கிகள்
இப்பழக்கத்தை
மேற்கொள்ளக்
கூடாது என்று
அறிவுறுத்துகிறோம்.
1.2
பாதுகாப்பு
பெட்டகத்திற்குப்
பிணையாக குறித்த
கால வைப்பு
நிதி:
1.2
பாதுகாப்பு
பெட்டகத்தை
வாடகைக்கு
எடுத்த
வாடிக்கையாளர்கள்
அதை
உபயோகப்படுத்தாமலோ
அல்லது உரிய
வாடகையைச்
செலுத்தாமலோ
இருக்கும்
சில
சந்தர்ப்பங்களை
வங்கிகள்
சிலசமயம்
எதிர்கொள்ள
நேரிடும். உரிய
வாடகையைத்
தொடர்ந்து
அளிப்பதை
உறுதி
செய்யும் வகையில்,
வங்கிகள், 3
லட்சத்திற்கான
வாடகை
மற்றும் பாதுகாப்பு
பெட்டகத்தை
ஒருவேளை
உடைக்க
நேரிட்டால்
அச்செயலையும்
சேர்த்து குறித்த
கால வைப்பு
நிதியாக, பாதுகாப்பு
பெட்டகம்
அளிக்கும்போது
பெற்றுக்
கொள்ளலாம். ஆனால்
தற்போதுள்ள
வாடகையாளர்களிடமிருந்து
இத்தகைய
வைப்பை
அளிக்கும்படி
வற்புறுத்தக்கூடாது.
1.3
பாதுகாப்பு
பெட்டகத்திற்காகக்
காத்திருப்போர்
பட்டியல்:
1.3
பாதுகாப்பு
பெட்டக வசதி
அளித்தல்
ஒளிவு மறைவு
இல்லாமல்
தெளிவாக
இருக்க
வேண்டும்.
அதற்குக்
காத்திருப்போர்
பட்டியல்
முறை
பின்பற்றப்படவேண்டும்.
அளித்தலுக்கான
விண்ணப்பங்கள்
பெறப்படும்போது
ஒப்புகைச்
சீட்டில் காத்திருப்போர்
எண்ணைக்
குறிப்பிட்டுக்
கொடுக்க
வேண்டும்.
1.4
பாதுகாப்பு
பெட்டகப்
பயன்படுத்தும்
செயல்முறை
பற்றிய ஒப்பந்த
நகலை,
பெட்டகம்
அளிக்கும்போது
வாடிக்கையாளருக்குக்
கொடுக்க
வேண்டும்.
1.4
2. பாதுகாப்பு
பெட்டகங்களுக்கு
பாதுகாப்பு ஏற்பாடுகள்
2.1 செயல் முறை:
வாடிக்கையாளர்களுக்குக்
கொடுக்கப்படும்
பாதுகாப்பு
பெட்டகங்களுக்கு
மிகுந்த
கவனத்துடனும்
முன்னெச்சரிக்கையுடனும்
பாதுகாப்பு
ஏற்பாடுகள்
செய்திட
வேண்டும்.
நடைமுறையில்
உள்ள செயல்
முறைவிதிகள்
தொடர்ச்சியான
முறையில்
அவ்வப்போது மறுஆய்வு
செய்யப்பட்டு
உரிய
நடவடிக்கைகள்
எடுக்கப் படவேண்டும்.
பாதுகாப்பு
ஏற்பாடுகள், சம்பந்தமான
ஆவணங்கள் ஆகியவை
நன்கு
பராமரிக்கப்பட்டு
சம்பந்தப்பட்ட
பணியாளர்களுக்கு
நன்கு
பயிற்சி
அளிக்க
வேண்டும்.
வங்கியின்
உள்ளக ஆய்வின்
தணிக்கையாளர்கள்
இதுபற்றி
அறிக்கை தாக்கல்
செய்யவேண்டும்.
2.2. பாதுகாப்பு
பெட்டகம்
அளிக்கப்படுமுன்
வாடிக்கையாளரை
தகுந்த
ஆவணங்களுடன்
நன்கு
அறிந்து
கொள்ளுதல்/பயன்படுத்தாத
பாதுகாப்பு
பெட்டகங்கள்
குறித்த
அணுகுமுறைகள்
சமீபத்திய
நிகழ்ச்சி
ஒன்றில் ஒரு
வங்கிக்
கிளையில்
உள்ள ஒரு பாதுகாப்பு
பெட்டகத்தில்
வெடிமருந்துகளும்,
ஆயுதங்களும்
இருந்தன. பாதுகாப்பு
பெட்டகங்களை
வாடகைக்கு
விடுவதில்
உள்ள
இடர்வரவுகளை
வங்கிகள்
சரியாக
உணர்ந்து
செயல்பட
வேண்டும். கீழே
கண்ட
நடவடிக்கைகளை
வங்கிகள்
மேற்கொள்ள வேண்டும்.
i. நடுநிலை
இடர்வரவில்
வரையறுக்கப்பட்ட
ஏற்கனவே
உள்ள/புதிய
வாடிக்கையாளர்களை
அறிந்து
கொள்ளும்
வழிவகைகளை, பாதுகாப்பு
பெட்டக
வாடகைதாரர்களுக்கும்
பின்பற்ற
வேண்டும். உயர்நிலை
இடர்வரவில்
உள்ள
வாடிக்கையாளர்களுக்கு
“வாடிக்கையாளரைத்
தெரிந்து
கொள்ளுங்கள் (KYC)” முறை
பின்பற்றப்பட
வேண்டும்.
ii. உயர்நிலை
இடர்வரவில் வாடிக்கையாளர் 1 வருடமும், நடுநிலை
இடர்வரவு வாடிக்கையாளர்
3 வருடமும், பாதுகாப்பு
பெட்டக
வசதியைப்
பயன்படுத்தவில்லை
என்றால், உடனே
அவரை
பயன்படுத்த
அல்லது
அவ்வசதியை
ஒப்படைக்கச்
சொல்லி
அறிவுறுத்த
வேண்டும்.
பயன்படுத்தாத
காரணத்தையும்
எழுத்து மூலம்
வாடிக்கையாளரைத்
தெரிவிக்கச்
சொல்லவேண்டும். அயல்நாடு
வாழ்
இந்தியருக்கு
உள்ளது போல்
அல்லது
மாற்றலுக்குட்பட்ட
பணி
நிமித்தம்
வெளியூருக்குச்
சென்றது
போன்ற
நியாயமான
காரணங்கள் இருந்தால்
மீண்டும்
இவ்வசதியை பயன்படுத்த
அனுமதிக்கலாம். வாடிக்கையாளர்
பதில் ஏதும்
சொல்லாமல்
இருந்தால்
அல்லது தொடர்ந்து
பயன்படுத்தாமல்
இருந்தால்
அவருக்கு
முன்னறிவிப்பு
கொடுத்து பாதுகாப்பு
பெட்டகத்தைத்
திறக்கும்
முயற்சிகளை
மேற்கொள்ள
வேண்டும். பாதுகாப்பு
பெட்டக
வசதியை
அளிக்குமுன்
அதற்கான
ஒப்பந்ததில், ஒரு
வருடத்திற்குமேல்
இவ்வசதியை பயன்படுத்தவில்லையென்றால்,
வாடகை
ஒழுங்காகச்
செலுத்தியிருந்தாலும்,
ஒப்பந்தத்தை
ரத்து செய்யவும்,
பாதுகாப்பு
பெட்டகத்தைத்
திறக்கவும்
வங்கிக்கு
அதிகாரம்
வழங்கும்
ஷரத்தைச்
சேர்க்க
வேண்டும்.
iii. வங்கிகள் தங்கள்
சட்ட
அறிவுரையாளர்களைக்
கலந்து, பாதுகாப்பு
பெட்டகங்களை
உடைத்து
உள்ளிருப்புகளைக்
கணக்கெடுத்துக்
கொள்ளத்
தகுந்த
கொள்கை
வழிமுறைகளை
உருவாக்கிட
வேண்டும்.
3. வாழுவோர்/வாரிசுதாரர்
சட்டரீதியான
வாரிசுகளுக்கு
பாதுகாப்பு
பெட்டகத்தைப்
பயன்படுத்த
அனுமதி/பாதுகாப்பிற்காகக்
கொடுக்கப்பட்ட
பொருட்களைத்
திருப்பி
அளித்தல்
3.1. எங்களது
சுற்றறிக்கை DBOD.No.Leg.BC.95/2004-05,
ஜுன் 9, 2005
தேதியிட்டதைப்
பார்க்கவும்.
வைப்புகளைத்
திருப்பிக்
கொடுத்தல்
சம்பந்தமாக
அதில் சொல்லியிருந்தோம். அதே
போல் பாதுகாப்பு
பெட்டகத்திலுள்ளவற்றையும்,
பாதுகாப்பிற்காகக்
கொடுக்கப்பட்ட
பொருட்களையும்
உயிருடன்
இருப்போர்/வாரிசு/சட்டரீதியான
வழிமுறையாளருக்கு
அளிக்க
வேண்டும்.
3.2
பாதுகாப்பு
பெட்டகம்/பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களைத்
திருப்பி
அளித்தல்
(உயிருடனிருப்போர்/வாரிசுதாரர்)
பாதுகாப்பு
பெட்டகத்தை
வாடகைக்கு
எடுத்தவர்,
தன்னுடைய
வாரிசை
நியமனம்
செய்திருந்தால்,
ஒருவேளை அந்த
வாடிக்கையாளர்
இறக்க நேரிட்டால்
வாரிசுதாரர் பாதுகாப்பு
பெட்டகத்தை
திறந்து
அதிலுள்ளவற்றை
எடுத்துக்கொள்ள
முழு
உரிமையுண்டு. பாதுகாப்பு
பெட்டகம்
இரண்டு
அல்லது
அதற்கு
மேற்பட்ட வாடிக்கையாளர்களால்
கூட்டாக
வாடகைக்கு
எடுக்கப்பட்டிருப்பின்
அனைத்து வாடிக்கையாளர்களும்,
வாரிசுகளை
நியமனம்
செய்திருந்தால்
யாராவது ஒரு வாடிக்கையாளர்
இறக்க
நேரிட்டாலும்,
உயிருடனிருக்கும்
மற்ற வாடிக்கையாளர்களுடன்
இறந்தவரின்
வாரிசுதாரர்
கூட்டாக பாதுகாப்பு
பெட்டகத்தைத்
திறக்க
அனுமதி வழங்க
வேண்டும்.
கூட்டாக
வாடகைக்கு
எடுத்து, “வாழ்பவர்
அல்லது
யாராவது
ஒருவர்”
முந்தியவர்
அல்லது
வாழ்பவர்”
என்று
செயலாக்க
முறை
அமைந்திருக்குமாயின்
உயிருடனிருப்பவர்
பாதுகாப்பு
பெட்டகத்தை
திறப்பதற்கு
அனுமதி
உண்டு.
ஆயினும்
வங்கிகள்
கீழே கண்ட
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை
மேற்கொண்ட
பிறகே பாதுகாப்பு
பெட்டகத்தின்
உள்ளிருக்கும்
பொருட்களை
அளிக்க வேண்டும்.
i.
வாழ்பவர்
அல்லது வாரிசுதாரரை
அடையாளம்
கண்டு
கொள்வதில்
மிகுந்த கவனமும்
எச்சரிக்கையுணர்வையும்
கடைப்பிடிக்க
வேண்டும். வாடகைதாரர்
இறந்து
போனதற்கும்
வாரிசுக்கும்
தக்க
சான்றாவணங்கள்
பெறப்பட
வேண்டும்.
i.
ii.
இறந்தவரின்
பாதுகாப்பு
பெட்டகத்தை
திறப்பதற்கு
ஏதேனும்
நீதிமன்றத்தடை
உத்தரவு
இல்லையென்பதை
வங்கிகள்
உறுதி செய்து
கொள்ள
வேண்டும்.
ii.
iii.
உயிருடனிருப்போர்/
வாரிசுக்கு பாதுகாப்பு
பெட்டகத்தைப்
பயன்படுத்தும்
அனுமதியை வங்கிகள்
அளிப்பது,
பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களை
அவர்களுக்குத்
திருப்பி
அளிப்பது
போன்ற செயல்கள்
எல்லாம்
இறந்துபோன வாடகைதாரரின்
சட்டரீதியான வாரிசுதாரர்
என்பதை நம்பி
பொறுப்பினை
அவர்வசம் ஒப்படைக்கும்
செயல் என்றே
கருதப்படும்.
வேரொரு நபர்
இறந்து
போனவரின் வாரிசு
ஆயினும்
வாழ்பவருக்கு
ஏதிராக
கோரும் உரிமையை
இச்செயல்
எவ்விதத்திலும்
தடைசெய்யாது
என்பதை வங்கிகள்
அவர்களுக்கு
உறுதிபடத்
தெரிவித்துவிட
வேண்டும்.
iii.
பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களைத் திருப்பி
அளிக்கும்போதும்
இதே வழிமுறை
பின்பற்றப்படவேண்டும்.
ஒன்றுக்கும்
மேற்பட்ட
நபர்
பாதுகாப்பிற்காக
பொருட்களைக்
கொடுத்திருந்தால்
வாரிசு
நியமனவசதி
கிடையாது.
3.3. மேலே
சொன்ன
நிபந்தனைகளுக்குட்பட்டே,
வாழுவோருக்கு/வாரிசுக்கு
பாதுகாப்பு
பெட்டகத்தை
பயன்படுத்தும்
வசதி
மீண்டும்
அளிக்கப்படுவதால்
வங்கியைப்
பொறுத்தவரை
தனது
பொறுப்புகளிலிருந்து
அது
முழுமையாக
விடுபட்டது
என்றே பொருளாகும். எனவே,
சட்டரீதியான
ஆவணங்களை கோருவது,
தேவையற்றதும்
வாடிக்கையாளருக்கு
தவிர்க்கக்கூடிய
தொல்லையை
அளிப்பதாகவும்
கருதப்படும். ஆகவே வங்கிகள்
இத்தகு
செயல்களில்
ஈடுபடுவது
கண்காணிப்பாளரின்
ஒப்புதலின்மைக்கு
இடமளிக்கும்.
இதுபோன்ற
நிகழ்வுகளில்
வங்கிகள்
வாழ்வோர்/
வாரிசுகளிடமிருந்து
மரபுரிமைச்
சான்றிதழ்,
உயில்,
ஈட்டுறுதிச்
சான்றிதழ்
போன்ற
ஆவணங்களைக்
கொடுக்கும்படி
நிர்பந்திப்பது
தவிர்க்கப்பட
வேண்டும்.
3.4. பாதுகாப்பு
பெட்டகம்/ பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களைத்
திருப்பியளித்தல்
(வாரிசு
நியமனம்
செய்யப்படாதபோது)
சட்டரீதியான
வாரிசுதாரர்களுக்குத்
தேவையற்ற
தொல்லைகளைக்
கொடுப்பதை வங்கிகள்
தவிர்க்கவேண்டும். இறந்த வாடகைதாரர்
வாரிசு நியமனம்
செய்யாவிட்டால்
அல்லது
கூட்டு வாடகைதாரர்கள்
‘வாழுவோர்’
என்ற செயலாக
சொற்றொடரைப்
பதிவு
செய்யாமலிருந்தால்
வங்கிகள் வாடிக்கையாளர்
நலன்பேணும்
வழிமுறைகளை
தங்கள் சட்ட
ஆலோசகர்களுடன்
கலந்து
மேற்கொள்ள
வேண்டும். பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களுக்கும்
இதே நடைமுறை பின்பற்றப்பட
வேண்டும்.
3.5 வங்கிகள்
ஒழுங்குமுறைச்
சட்டம் 1949,
பிரிவுகள் எண்.45ZC லிருந்து
ZF முடிய
மற்றும்
வங்கிக்
கம்பெனி
(வாரிசு) விதிகள்
1985 மற்றும்
இந்திய
ஒப்பந்தச்
சட்டம் மற்றும்
இந்திய
மரபுரிமைச்
சட்டம்
ஆகியவற்றையும்
வங்கிகள்
பின்பற்ற
வேண்டும்.
3.5
3.6 பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களைத்
திருப்பிக்
கொடுக்கும்
போதோ அல்லது பாதுகாப்பு
பெட்டகத்திலுள்ள
பொருட்களை
எடுத்துக்
கொடுக்கும்போதோ
அவற்றின்
விவரம்
அடங்கிய
பட்டியலை வங்கிகள்
தயார் செய்ய
வேண்டும். இது
சம்பந்தமான
எங்கள்
சுற்றறிக்கை DBOD.No.Leg.BC 38/ C233A-85, மார்ச் 29, 1985 தேதியிட்டதைப்
பார்க்கவும். இச்சுற்றறிக்கையோடு
இணைக்கப்பட்ட
அறிவிப்பில் உள்ள
படிவத்தை
ஒத்த மாதிரி
அல்லது
கிட்டத்தட்ட
அதுபோல
பொருட்களின்
விவரப்பட்டியல்
தயாரிக்கப்பட
வேண்டும்.
3.6
3.7 வாழுவோர்/வாரிசு/மரபுரிமையாளர்
பாதுகாப்பு
பெட்டகத்தைத்
தொடர்ந்து பயன்படுத்த
விரும்பினால்
அவர்களுடன்
புதிய
ஒப்பந்தம்
செய்து
கொண்டு வங்கிகள்
அவர்களை
அனுமதிக்கலாம். ‘உங்கள் வாடிக்கையாளரைத்
தெரிந்து
கொள்ளுங்கள்’
முறை
பின்பற்றப்பட
வேண்டும். சீல் வைக்கப்பட்ட
மூடிய
பாக்கெட்டுகள்
பாதுகாப்பு
பெட்டகத்தில்
அல்லது பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்டிருந்தால்
வாரிசு/
வாழுவோருக்கு
கொடுக்கும்போது
அவற்றை வங்கிகள்
பிரித்து
கொடுக்க
வேண்டிய
அவசியமில்லை.
3.7
3.8 எளிதாக்கப்பட்ட
நடைமுறைகள்/செயல்பாடுகள்
3.8
பலவிதமான சந்தர்ப்பங்களில்
இறந்துபோன
வைப்பாளர்களது
வாரிசுகளின்
கேட்புரிமைகள்
மீதான மாதிரி
நடவடிக்கை
முறையை
வங்கியாளர்
சங்கம்
வகுத்தளித்திருக்கிறது. அதே
போல் இறந்து
போன வாடகைதாரர்களது
வாரிசுகளின்
பாதுகாப்பு
பெட்டக
கேட்புரிமை / பாதுகாப்பிற்காக
கொடுக்கப்பட்ட
பொருட்களைத்
திருப்பி
கொடுக்கக்
கோருதல்
சம்பந்தமாகவும்
விளக்கமான
செயல்முறை
ஒன்றை அளிக்க
வங்கியாளர்
சங்கத்தை
நாங்கள்
கேட்டுக்
கொண்டுள்ளோம். அமலில்
ஏற்கனவே உள்ள
நடைமுறைகளை மறு
ஆய்வு செய்து இறந்து
போன
வைப்பாளர்/ வாடகைதாரர்களது
வாரிசுகளின் கேட்புரிமையை
எளிதாக
நிறைவேற்றும்
வண்ணம்
கொள்கைகளை வகுத்து
செயல்பட
வேண்டும். மேலே
சொல்லப்பட்ட அனைத்து
விபரங்களையும்
கருத்தில்
கொண்டு வங்கிகள்
தங்கள்
இயக்குநர்
குழுவின்
ஒப்புதலோடு
மறு பரிசீலனை
செய்ய
வேண்டும்.
4. வாடிக்கையாளர்களுக்கு
வழிகாட்டுதலும்/
விளம்பரமும்
4.1. வாரிசு நியமன
வசதி/ ‘வாழுவோர்’
சொற்றொடரை
செயல்முறைக்கும் பயன்படுத்துதலின்
பயன்கள்
வாரிசு
நியமன வசதி/ ‘வாழுவோர்’
சொற்றொடரை
செயல்முறைக்கும் பயன்படுத்துதலின்
பயன்களை
வைப்பாளர்களுக்கும்
வாடகை
தாரர்களுக்கும்
வங்கிகள்
நன்கு
விளம்பரப்படுத்தி
அறிவிக்க
வேண்டும். ‘வாழுவோர்’
என்ற
சொற்றொடர்
செயல்முறைக்கு
இல்லாதிருப்பின்
கூட்டாக பாதுகாப்பு
பெட்டகத்தை வாடகைக்கு
எடுத்திருப்பவர்களில்
ஒருவர் இறக்க
நேரிட்டால் மற்றவருக்கு
பெட்டகத்தை
உபயோகப்
படுத்தும்
உரிமை
தானாகவே
வராது என்பதை வங்கிகள்
வாடிக்கையாளர்களுக்கு
பாதுகாப்பு
பெட்டக வசதி
அளிக்கும்போது
தெளிவுற
அறிவுறுத்திடவேண்டும்.
4.2. பாதுகாப்பு
பெட்டக வசதி/
பொருட்களை
பாதுகாப்பாக வைத்திருத்தல்,
இவ்வசதிகளை பயன்படுத்தும்
வாடிக்கையாளர்கள்
இறக்க
நேரிடும் போது
அவர்களின் வாரிசு/ மரபுரிமையாளர்/
வாழுவோருக்கு
அப்பொருட்களைத்
திருப்பிக்
கொடுக்கும்
முறைகள்
பற்றிய
விவரங்கள்
ஆகிய அனைத்தையும்
வங்கிகள்
தங்களது இணைய
தளத்தில்
வெளியிட
வேண்டும். வாரிசு/மரபுரிமையாளர்/
வாழுவோர்
இவர்களுக்கு
வழிமுறைகளின்
அச்சடித்த
நகலை அவர்கள்
தங்கள்
உரிமையைக்
கோரும்போது
அளிக்க
வேண்டும்.
5. பாதுகாப்பு
பெட்டகங்களின்
சாவிகள் அனைத்திலும்
வங்கிகள்
தங்களது
வங்கி/கிளையின்
அடையாள
எண்ணைப் பொறிக்க
வேண்டும். பாதுகாப்பு
பெட்டகத்தைப்
பயன்படுத்துவோரை
எளிதில்
அடையாளம்
கண்டுகொள்ள
இது உதவும்.
நம்பிக்கையுள்ள
பிரஷாந்த்
சரண்
தலைமைப்
பொது
மேலாளர்(பொறுப்பு)
DBOD.No.Leg.BC.38/C.233A-85
பின்னிணைப்பு - 1
மார்ச் 29, 1985
வங்கி
விதிமுறைச்
சட்டம் 1949ன்
சட்டப்பிரிவு
எண்.45ZC ன்
உட்பிரிவு
எண். 3,
சட்டப்பிரிவு
எண்.45ZE உட்பிரிவு
எண்.(4)ன்படி
முறையே
ரிசர்வ்
வங்கிக்கு
வழங்கப்பட்டிருக்கும்
அதிகாரத்தை
செலுத்தும்விதமாக
ரிசர்வ்
வங்கி
பின்குறிப்பிடும்படி
வழிகாட்டுகிறது.
பாதுகாப்புப்
பெட்டகங்களில்
வைக்கப்படும்
பொருட்களைத்
திருப்பித்தரும்போதும்,
அல்லது
பாதுகாப்புப்
பெட்டகப்
பொருட்களை
வெளியே
எடுக்க
அனுமதிக்கும்போதும்
அளிக்கப்
படும்
விவரப்பட்டியல்கள்
இத்துடன்
இணைக்கப்பட்டுள்ள
குறிப்பிட்ட
படிவங்களிலோ
அல்லது
தேவைக்கேற்ப
அதற்கு இணையான
படிவங்களிலோ
வழங்கப்படும்.
ஏ. கோஷ்
துணை ஆளுநர்.
வங்கியின்
பாதுகாப்பு
பெட்டகத்தில்
வைக்கப்பட்ட
பொருட்களின்
விவரப்பட்டியல்
(வங்கி
விதிமுறைச்
சட்டம் 1949ன்
சட்டப்பிரிவு
எண்.45ZC (3) )
பின்வரும்
பொருட்கள் வங்கியின்
...................... கிளையின்
பாதுகாப்பு
பெட்டகத்தில்
ஸ்ரீ/ஸ்ரீமதி
..................................
(இறந்துவிட்டவர்)
ஒப்பந்தம் /ரசீதின்
.................
தேதியிட்டதன்படி
...............நாள்
.................ஆண்டில்
எடுத்துக்கொள்ளப்பட்டது.
வரிசை எண்
|
பாதுகாப்பு
பெட்டகத்தில்
வைக்கப்
பட்ட பொருட்களின்
விவரம்
|
அடையாளம்
காணும்
குறிப்புகள்
ஏதேனும்
இருப்பின்
|
|
|
|
|
|
|
குறிப்பிட்ட
பொருட்கள்
கீழ்க்கண்டவர்
முன்னிலையில்
எடுத்துக்கொள்ளப்
பட்டது.
1.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
2.
3.
ஸ்ரீ/ஸ்ரீமதி......................................
மைனர்
வாரிசுதாரரின்
சார்பில்
நியமிக்கப்பட்டவர்
1.
ஸ்ரீ/ஸ்ரீமதி............................
முகவரி...............................................................
கையொப்பம்
...................................
ஸ்ரீ/ஸ்ரீமதி................................
(வாரிசுதாரர்/
மைனர்
வாரிசுதாரரின்
சார்பில்
நியமிக்கப்பட்டவர்)
நான்,
மேற்குறிப்பிட்ட
பொருட்களை
பெற்றுக்
கொண்டதை
ஒப்புக்கொள்கிறேன். அதன்
விவரங்களின்
நகலும்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
கையொப்பம்
தேதி &
இடம்:
ஸ்ரீ/ஸ்ரீமதி...................................(மைனர்
வாரிசுதாரரின்
சார்பில்
நியமிக்கப்பட்டவர்)
கையொப்பம்
தேதி &
இடம்:
வங்கியில்
வாடகைக்கு
எடுக்கப்பட்ட
பாதுகாப்பு
பெட்டகத்தில்
வைக்கப்பட்ட
பொருட்களின்
விவரப்பட்டியல்
(வங்கி
விதிமுறைச்
சட்டம் 1949ன்
சட்டப்பிரிவு
எண்.45ZE (4) )
................வங்கியின்
......................
கிளையிலுள்ள
பெட்டகக் கருவூலத்தில்
அமைந்த ...........
எண்ணுள்ள
பாதுகாப்பு பெட்டக
அறையிலுள்ள
பொருட்களின்
விவரங்கள்
பின்வருமாறு:
* .............
எண்ணுள்ள
பாதுகாப்பு
பெட்டக அறையை
வாடகைக்கு
எடுத்த நபர்.
ஸ்ரீ/ஸ்ரீமதி
..................................
(இறந்தவர்).
அவரின்
தனிப்பெயரில்
மட்டும்
எடுக்கப்பட்டது.
* .............
எண்ணுள்ள
பாதுகாப்பு
பெட்டக அறையை
வாடகைக்கு
எடுத்த நபர்.
ஸ்ரீ/ஸ்ரீமதி
..................................
(இறந்தவர்).
*
ஸ்ரீ/ஸ்ரீமதி...........................யுடன்
இணைந்து
வாடகைக்கு
எடுத்தவர்.
அதிலுள்ள
பொருட்கள்..........தேதி...........மாதம்................ஆண்டில்
எடுத்துக்
கொள்ளப்பட்டது.
வரிசை எண்
|
பாதுகாப்பு
பெட்டகத்தில்
வைக்கப்
பட்ட பொருட்களின்
விவரம்
|
அடையாளம்
காணும்
குறிப்புகள்
ஏதேனும் இருப்பின்
|
|
|
|
|
|
|
விவரப்பட்டியல்
எடுக்கும்பொருட்டு
பாதுகாப்பு
பெட்டக
அறையின்
பயன்பாட்டிற்கு
அனுமதி
பின்வரும்
வேளையில்
வாரிசுதாரருக்கு/உயிரோடு
இருக்கும்
பெட்டக அறை
வாடகையாளருக்கு
வழங்கப்படலாம்.
§
சாவி
அவர் வசமிருந்தால்
§
§
அவரின்/அவளின்
வேண்டுகோளின்பேரில்
பாதுகாப்பு
பெட்டக அறை
உடைக்கப்பட்டால்
மேற்குறிப்பிட்ட
பொருட்களின்
விவரங்கள் கீழ்க்கண்டவர்
முன்னிலையில்
எடுத்துக்கொள்ளப்
பட்டது.
1.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
2.
முகவரி ------------------------------------
3.
கையொப்பம்
(அல்லது)
4.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
5.
முகவரி ------------------------------------
6.
கையொப்பம்
மற்றும்
1.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
முகவரி
------------------------------------
கையொப்பம்
2.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
முகவரி
------------------------------------
கையொப்பம்
(இணை
வாரிசுதாரர்கள்)
சாட்சிகள்:
பெயர்............................
முகவரி...............................................................
...................................
கையொப்பம்
பாதுகாப்பு
பெட்டக
அறையிலுள்ள
மேற்குறிப்பிட்ட
பொருட்களை
ஸ்ரீ/ஸ்ரீமதி...............ஸ்ரீ/ஸ்ரீமதி................
(வாரிசுதாரர்/
உயிரோடிருக்கும்
இணை வாரிசுதாரர்கள்)
பெற்றுக்
கொண்டதற்கான
ஒப்புதலை
இதன் நகலுடன்
அளிக்கிறோம்.
ஸ்ரீ/ஸ்ரீமதி....................................
(வாரிசுதாரர்)
................................
கையொப்பம்
தேதி &
இடம்:
ஸ்ரீ/ஸ்ரீமதி............................(
உயிரோடிருக்கும்
இணை வாடிக்கையாளர்)
.....................................
கையொப்பம்
ஸ்ரீ/ஸ்ரீமதி..........................(உயிரோடிருக்கும்
இணை வாடிக்கையாளர்)
.....................................
கையொப்பம்
தேதி &
இடம்: