முன்னுரிமைத் துறை கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்: பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் – கடந்த மூன்று ஆண்டுகளில் முறைமையின்படி சராசரி விவரம் |
RBI/2017-18/61
Ref.No.FIDD.CO.Plan.BC.16/04.09.01/2017-18
செப்டம்பர் 21, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரிகள்
(அனைத்து உள்நாட்டு பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்)
(பிராந்திய கிராம வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
முன்னுரிமைத் துறை கடன் - இலக்குகள் மற்றும் வகைப்படுத்துதல்:
பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் –
கடந்த மூன்று ஆண்டுகளில் முறைமையின்படி சராசரி விவரம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருள் பற்றி, ஜூலை 16, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை No. FIDD. CO. Plan. BC. 08/04.09.01/2015-16-யின் படி, பெருநிறுவனம் சாராத விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நேரடியாக கடன் வழங்கியதில் உள்ள சாதனையைக் கணக்கிட சராசரி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், மேலும் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இவை தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இது சம்பந்தமாக, 2017-18 நிதியாண்டிற்கான முன்னுரிமைத் துறையின் கீழ் கடன் வழங்கியதில் உள்ள சாதனையைக் கணக்கிட சராசரி என்பது11.78% ஆகும்.
இங்ஙனம்
(உமா சங்கர்)
முதன்மை தலைமைப் பொதுமேலாளர் |
|