Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (206.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/09/2017
மேற்கு வங்காள மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் – முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

RBI/2017-18/60
Ref.No.FIDD.CO.LBS.BC.15/02.08.001/2017-18

செப்டம்பர் 21, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரிகள்
அனைத்து முன்னோடி வங்கிகள்

அன்புடையீர்

மேற்கு வங்காள மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் –
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

மேற்கு வங்காள அரசாங்கம், மார்ச் 20, 2017 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் ஏப்ரல் 04, 2017 முதல் “ஜார்கிரம்“ எனும் புதிய மாவட்டமும், மார்ச் 24, 2017 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் ஏப்ரல் 07, 2017 முதல் “பஸ்சிம் பர்த்தமான்“ எனும் புதிய மாவட்டமும் உருவாக்கவுள்ளது. புதிய மாவட்டங்களுக்கான முன்னோடி வங்கியின் பொறுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம் முந்தைய மாவட்டம் புதிய மாவட்டத்தின் கீழ் உள்ள உட்பிரிவு பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னோடி வங்கி புதியமாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீடு
1. பஸ்சிம் மெதினிப்பூர் பஸ்சிம்மெதினிப்பூர் மெதினிப்பூர் சதார் கரக்பூர் கத்தால் யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா 112
2. ஜார்கிரம் பஸ்சிம்மெதினிப்பூர் ஜார்கிரம் சதார் யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா 398
3. பூர்பா பர்த்தமான் பூர்பா பர்த்தமான் பர்த்தமான் வடக்கு சதார் பர்த்தமான் தெற்கு சதார் காட்வா கல்னா யூகோ வங்கி 399
4. பஸ்சிம்பர்த்தமான் பூர்பா பர்த்தமான் அசன்சோல் சதார் துர்க்காபூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 403

2. மேலும், மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிகளின் BSR ரிப்போர்ட்டுக்காக புதிய மாவட்டங்களுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

3. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முன்னோடி வங்கிகளின் பொறுப்புகளில் எந்த மாற்றமுமில்லை.

இங்ஙனம்

(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்