Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (243.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/07/2017
கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் / கணக்கு அறிக்கையில் பரிவர்த்தனை விவரங்கள் பதிவு செய்தல்

அறிவிப்பு எண் 24
Ref.No.DCBR.BPD.(RCB).Cir.No.02/12.05.001/2017-18

ஜூலை 13, 2017

தலைமை நிர்வாக அதிகாரி
தொடக்க நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்/
அனைத்து மாநிலக் கூட்டுறவு வங்கிகள்/
அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/

அன்புடையீர்

கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் / கணக்கு அறிக்கையில் பரிவர்த்தனை விவரங்கள் பதிவு செய்தல்

இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் 26, 2010 தேதியிட்ட சுற்றறிக்கை UBD. CO. BPD (PCB) No. 18/12.05.001/2010-2011-ஐயும், அக்டோபர் 22, 2014 தேதியிட்ட சுற்றறிக்கை RPCD.CO.RCB.BC.No.36/07.51.010/2014-15-யில் இணைப்பில் பாரா 4.6.3-ஐயும் பார்க்கவும். பண வைப்பாளர்களுக்குக் கணக்குப் புத்தகங்கள் / கணக்கின் அறிக்கையில் தவறான புரிந்துகொள்ள முடியாத பதிவுகளைத் தவிர்த்திடவேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு கணக்கில் உள்ள பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் சுருக்கமாகத் தெளிவாக கணக்குப் புத்தகங்கள் / அறிக்கையில் கட்டாயமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை, கூட்டுறவு வங்கிகள் உறுதிசெய்திட வேண்டும்.

2. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க, பல வங்கிகளும் கணக்குப் புத்தகங்களில் மற்றும் / அல்லது அறிக்கையில் பரிவர்த்தனை விபரங்களை சரிவர அளிப்பதில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை நலனுக்காக, வங்கிகள் குறைந்தபட்சம் தேவையான விபரங்களை அவர்களின் கணக்குப்பதிவுகளில் வழங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனைகளின் பட்டியல் மாதிரிக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அவற்றை முழுமையானதாகக் கருதக் கூடாது.

3. கூட்டுறவு வங்கிகள் 'வைப்புத்தொகை காப்பீடு' பற்றிய தகவல்களையும் அவ்வப்போது மாறும் காப்பீட்டு வரம்புத் தொகையையும் கணக்குப் புத்தகத்தின் முன்பக்கத்திலேயே தெரிவிக்கவேண்டும்.

இங்ஙனம்

(நீரஜ் நிகம்)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே குறிப்பட்டபடி


இணைப்பு

கணக்கு அறிக்கை / கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படவேண்டிய விபரங்கள்

I பற்று விபரங்கள்
a. மூன்றாம் தரப்பினருக்கு பணம் செலுத்துதல் i) பணம் பெறுபவரின் பெயர்
ii) முறை – பாரிமாற்றம், தீர்வுமுறை, கிளைகளுக்கிடையே, காலத்தில் மொத்த தீர்வு செய்தல் (RTGS)/மின்னணு பணப்பரிவர்த்தனை (NEFT), பணம், காசோலை (எண்)
iii) பணம் மாற்றப்பட்ட வங்கியின் பெயர்- பணம் செலுத்துதல் தீர்வு முறை / கிளைகளுக்கிடையே பரிவர்த்தனை / காலத்தில் மொத்த தீர்வு செய்தல் (RTGS)/மின்னணு பணப்பரிவர்த்தனை (NEFT) மூலம்
b. தனக்கே பணம் செலுத்துதல் i) தானாக பணம் செலுத்துபவர் எனக் குறிப்பிடுக
ii) பணம் செலுத்தப்படும் ஏடிஎம் பெயர் / வங்கிக் கிளையின் பெயர் / மற்ற வங்கிக் கிளையின் பெயர்
c. வரைவோலை / பே ஆர்டர்ஸ் / பிற பணம் செலுத்தும் சாதனங்கள் i) பணம் செலுத்துபவர் பெயர் (சுருக்கமாக / சுருக்கமான)
ii) கொடுக்கும் வங்கியின் பெயர் / வங்கிக் கிளையின் பெயர் / சேவைக் கிளையின் பெயர்
d. வங்கிக் கட்டணங்கள் i) கட்டணங்களின் தன்மை - கட்டணம் / கமிஷன் / அபராதம் இன்ன பிற
ii) கட்டணத்திற்கான காரணங்கள் சுருக்கமாக உதாரணத்திற்கு, காசோலை (எண்) திரும்பியதற்கு, கமிஷன் / வரைவோலை வழங்கப்பட்டதற்கான கட்டணம் / அனுப்பியமைக்கு (வரைவோலை எண்), காசோலை பெற்றதற்கான கட்டணம் (எண்), காசோலை புத்தகம் வழங்கியமைக்கு, எஸ்எம்எஸ் விழிப்பூட்டல் கட்டணம், கூடுதல் பணம் திரும்பப் பெறுதல் இன்ன பிறவற்றிற்காக
e. தவறான வரவுகளைத் திருத்தி/ மீட்டல் i) முதலில் தவறான வரவு பதியப்பட்ட தேதி
ii) திரும்பப் (மீட்பு) பெறப்பட்டதற்கான காரணம் சுருக்கமாக
f. கடன் / கடனுக்கான வட்டியின் தவணைகளை மீட்டல் i) கடன் கணக்கு எண்
ii) கடன் கணக்கு வைத்திருப்பவர் பெயர்
g. நிலையான வைப்பு / தொடர் வைப்பு உருவாக்குதல் i) நிலையான வைப்பு / தொடர் வைப்பு / ரசீது எண்
ii) நிலையான வைப்பு / தொடர்வைப்பு கணக்கு வைத்திருப்பவர் பெயர்
h. விற்பனை மையத்தில் செய்யும் பரிவர்த்தனை i) பரிவர்த்தனை செய்த தேதி, நேரம் மற்றும் அடையாள எண்
ii) விற்பனை மையம் இருக்குமிடம்
i. வேறு ஏதேனும் i) மேலே குறிப்பிட்டுள்ள அதே வகையில் மேற்கொண்டு விவரங்களை வழங்கவும்.
குறிப்பு - பல வரவுகளை ஒற்றை பற்று கணக்கில் இருக்குமானால், பணம் பெறுபவர் பெயர் / கணக்கு எண் / கிளை / வங்கி ஆகிய விபரங்களை பதிவு செய்யப்படாது. இருப்பினும், பல்வகையில் பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற உண்மை சுட்டிக்காட்டப்படும்.

II வரவு வைத்தல் விபரங்கள்
a. ரொக்கமாக டெபாசிட் i) ரொக்கப் பணம் வைப்பு என்று குறிப்பிடப்படும்
ii) டெபாசிட் செய்தவர் பெயர் – தனது / மூன்றாவது நபர்
b. மூன்றாம் தரப்பினரிடமிருந்து பண வரவு i) செலுத்தியவர் / நிதிமாற்றம் செய்பவரின் பெயர்
ii) முறை – பரிமாற்றம், தீர்வுமுறை, கிளைகளுக்கிடையே, உடனுக்குடனான மொத்த தீர்வு செய்தல் (RTGS)/மின்னணு பண மாற்றம்(NEFT), பணம், இன்ன பிற
iii) நிதிமாற்றம் செய்யும் வங்கியின் பெயர், பணம் -தீர்வு முறை / கிளைகளுக்கிடையே பரிவர்த்தனை / உடனுக்குடனான மொத்த தீர்வு செய்தல் (RTGS)/மின்னணு பண மாற்றம்(NEFT) மூலம்
c. தீர்வு / சேகரிப்பு / வரைவோலை ஆகியவற்றின் மூலமே பணம் வழங்கப்படுதல் i) வரைவோலை வழங்கும் வங்கியின் பெயர்
ii) காசோலை மற்றும் வரைவோலையின் தேதி மற்றும் எண்
d. தவறான பற்றுகளைத் திரும்பப் பெறுதல்(கட்டணங்கள்உட்பட) i) முதலில் தவறான பற்று பதியப்பட்ட தேதி
ii) திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம் சுருக்கமாக
e. பண வைப்பிற்கு வட்டி i) சேமிப்புக் கணக்கில் / நிலையான வைப்புக்கு வட்டி செலுத்தப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும்
ii) நிலையான வைப்புகளில் வட்டி செலுத்தப்பட்டால் குறிப்பிட்ட வைப்புத்தொகை கணக்கு / ரசீது எண்ணை குறிப்பிடவும்
f. நிலையான வைப்பு / தொடர் வைப்புத் தொகை முதிர்வு காலம் i) நிலையான வைப்பு / தொடர் வைப்புதாரரின் பெயர்
ii) நிலையான வைப்பு / தொடர் வைப்பு கணக்கு / ரசீது எண்
iii) முதிர்வு தேதி
g. கடன் வருமானம் i) கடன் கணக்கு எண்
h. வேறு ஏதேனும் i) போதுமான விவரங்களை வழங்கவும்.
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்