அறிவிப்பு எண்/2017-18/22
Ref. No. DGBA. GBD. 69/15.02.005/2017-18
ஜூலை 13, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி
பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி,கிஷான் விகாஸ் பத்ரா-2014
சுகன்யா சம்ரித்தி கணக்கு,மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 2004
போன்றவற்றைக் கையாளும் முகவர் வங்கிகள்
அன்புடையீர்
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
எங்களின் மேற்கண்ட தலைப்பில் உள்ள ஏப்ரல் 06, 2017 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DGBA. GAD. 2618/15.02.005/2016-17-ஐப் பார்க்கவும். 2017-18-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான, வட்டி விகிதங்களை ஜுன் 30, 2017 தேதியிட்ட அலுவலக ஆணை (OM) No. F. No. 1/04/2016 – NS-ன் மூலம் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
2. இந்தச் சுற்ற்றிக்கையின் விவரங்கள், அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களை அமல்படுத்துகின்ற உங்கள் வங்கியின் கிளைகளுக்குத் தேவைப்படும் நடவடிக்கையை எடுக்கும்பொருட்டு, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வரப்படவேண்டும். இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பயன்பெறும் வகையில் அவை உங்கள் கிளைகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்.
இங்ஙனம்
(V. S. ப்ரஜிஸ்)
உதவிப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி
|