இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இல் இரண்டாம் அட்டவணையில் தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத்தைச் சேர்த்தல் |
அறிவிப்பு எண்/2017-18/13
Ref. No. DCBR. RCB. BC. No. 01/19.51.025/2017-18
ஜூலை 06, 2017
எல்லா மாநிலக் கூட்டுறவு வங்கிகள் /
மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இல் இரண்டாம் அட்டவணையில்
தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana
State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத்தைச் சேர்த்தல்
மார்ச் 29, 2017 தேதியிட்ட அறிக்கை எண் DCBR. CO. RCBD. No. 02 / 19.51.025 / 2016-17-ன்படியும், இந்திய அரசிதழில் (மே 27 முதல் ஜுன் 02, 2017 வரை வாராந்திர எண் 21 – பகுதி III – பிரிவு 4) வெளியிட்டபடி, தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-இன் இரண்டாம் அட்டவணையில் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவுறுத்துகிறோம்.
இங்ஙனம்
(N. ஸ்ரீதர்)
பொதுமேலாளர் |
|