அறிவிப்பு எண் 331
Ref. No. DCM (Plg) 5720/10.27.00/2016-17 ஜுன் 29, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் (SBNs)
(சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட நோட்டுகள்)
இந்திய அரசால் ஜுன் 20, 2017 தேதியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வங்கி நோட்டுகளின் - சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட (வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்செய்யப்பட்ட) நோட்டுகளின் விதிகள் 2017 (நகல் இணைக்கப்பட்டுள்ளது)-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கவும். அதன்படி, பாரா 2-ல் உள் விதிமுறைகளின்படி, நவம்பர் 10-14, 2016 வரையான தேதிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை கீழே குறிப்பிட்டபடி ஏற்றுக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நவம்பர் 10-14, 2016 வரையான தேதிகளில் வைப்புத் தொகைக்காக மாற்றப்பட்ட / ஏற்றுக்கொள்ளப்பட்ட, சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட வங்கி நோட்டுகளே வைப்புக்குத் தகுதியுடையவையாகும். நவம்பர் 08, 2016-ம் தேதி பரிவர்த்தனை/ அலுவலக நேரம் முடிந்து அன்று கையிருப்பிலிருந்த குறிப்பிட்ட நோட்டுகள், ஆனால் டெபாசிட் செய்யப்படாதவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நவம்பர் 15, , 2016-க்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘குறிப்பிட்ட வங்கி நோட்டுகள்’ இந்த வசதியின் கீழ் டெபாசிட்டாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
-
இந்த வசதிகள் அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நக்பூர், புதுதில்லி பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கிடைக்கும்.
-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தகுதியான குறிப்பிட்ட நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத் திட்டத்தி (Bank Guarantee Scheme)-ன் கீழ் டெபாசிட் செய்யும். குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள் குறிப்பிட்ட நோட்டுகளை திருப்பிச் செலுத்தாமைக்கு கூறப்படும் காரணங்களினால் இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்தால்தான், சம்பந்தப்பட்ட வங்கிகளின் கணக்குக்கு அந்தத் தொகை வரவு வைக்கப்படும்.
-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் எந்த மண்டலத்தின் ஆட்சிஎல்லையின் கீழ் உள்ளதோ, அந்தமண்டல அலுவலகத்தை நாட வேண்டும்.
-
இவ்வாறு பெறப்பட்ட குறிப்பிட்ட நோட்டுகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதிநிதியின் முன்னிலையில், அதன் அளவு , துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக விரிவான பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது. பிறகு குறைவு / அதிகப்படி மற்றும் போலியானவைகளுக்கு ஏற்றபடி கணக்கு சரி செய்யப்படும்.
-
ஜூலை 19, 2017 வரை , நியமிக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் குறிப்பிட்ட நோட்டுகளைப் இவ்வாறு பெற்றுக்கொள்ளும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பட்டபடி
|