அறிவிப்பு எண் 329
Ref. No. DBR. NBD. 77/16.13.218/2016-17
ஜுன் 29, 2017
செலுத்துகை வங்கிகளின்
தலைமை நிர்வாக அதிகாரிகள்
அன்புடையீர்
செலுத்துகை வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்குகளில்
நிலுவைத் தொகையின் வரம்புகள் –
மற்ற வங்கிகளுடன் நிதிமாற்ற ஏற்பாடுகள்
அக்டோபர் 06, 2016 தேதியிட்ட செலுத்துகை வங்கிகளின் செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்களின் (இயக்க வழிகாட்டுதல்கள்) பாரா 7(i)–ஐப் பார்க்கவும். அதன்படி செலுத்துகை வங்கிகள் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் / சிறிய நிதி வங்கிகளுடன் ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, தங்கள் வங்கிகளில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட அதிகமான பணம் இருந்தால், அந்தப்பணத்தை வாடிக்கையாளருக்கு ஏற்பாட்டு வங்கியில் ஒரு கணக்கு தொடங்கி அதில் சேர்க்கவேண்டும்.
2. செலுத்துகை வங்கிகளின் கருத்துகள் / திட்டங்கள் அடிப்படையிலும், அதன் “அனைவருக்கும் வங்கி சேவை / நிதியியல் சேர்க்கை“ நோக்கத்தையும் கருத்தில்கொண்டும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
-
செலுத்துகை வங்கிகள் மற்றொரு வங்கியின் வணிக முகவர்களாக செயல்படஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வணிக முகவர் ஏற்பாட்டின் கீழ், வாடிக்கையாளரின் முன் அனுமதியுடன் அல்லது பொதுவான அனுமதியுடன், அவரது தகுதிவாய்ந்த மற்றொரு வங்கிக் கணக்கில் போட்ட பணத்தை நிதிமாற்றம் செய்து, செலுத்துகை வங்கியில் உள்ள அவரது கணக்கின் இருப்பு ரூ. 100,000-மோ அல்லது அவரால் குறிப்பிடப்பட்ட அதற்கும் குறைவான தொகையோ இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளலாம்.
-
எந்த நேரத்திலும் செலுத்துகை வங்கிகளுக்கு , வாடிக்கையாளரின் வேரொரு வங்கியில் உள்ள கணக்கில் (எந்தவங்கிக்கு நிதி மாற்றம் செய்யப்படுகிறதோ அந்தவங்கிக் கணக்குஉட்பட) உள்ள பணத்தை அணுகவோ, நேரடியாக அதை இயக்கவோ உரிமை கிடையாது. இருப்பினும், ஒரு வங்கியின் வணிக முகவராக செலுத்துகை வங்கி செயபல்படும்போது, தனது வாடிக்கையாளர் அந்த வங்கியில் வைத்துள்ள கணக்கிலிருந்து பணம் எடுத்தல் / நிதி மாற்றம் முதலியவைகளை எளிதாக செயல்படுத்தமுடியும். அதே நேரம் செலுத்துகை வங்கிகள், வாடிக்கையாளர் கணக்கில் மாற்று உரிமை அதிகாரம் மூலமோ (Power of Attorney), பொது சம்மதத்தின் கீழோ (General consent) மற்றொரு வங்கியுடன் வைத்துள்ள அவரது கணக்குகளில் பற்று பரிவர்த்தனைகளை தொடங்காது என்பது தெளிவுக்காக வலியுறுத்தப்படுகிறது.
-
செலுத்துகை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு, வாடிக்கையாளர்களின், வேறு ஏதானும் வங்கியிலோ, வேறு வழியிலோ கணக்கிலிருக்கும் நிலுவைகளைக் கொண்டு, ஒரே நாளிலான நிதி வசதிகளைப் பெற ஏற்பாடு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
-
செலுத்துகை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வைப்பு / பரிவர்த்தனை அளவு அவர்களுடைய நிலைக்கு பொருந்தாததாக/ இணக்கமற்றதாக இருக்கும்போது, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டு, அறிக்கை செய்யவும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளை கவனமாகக் கண்காணிக்கவேண்டும்.
3. இந்த அறிவுறுத்தல்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாட்டு வழிகாட்டுதல்களுடன் சேர்க்கப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.
இங்ஙனம்
(சௌரவ் சின்ஹா)
தலைமைப் பொதுமேலாளர்
|