இந்தியஅரசாங்கம்
நிதிஅமைச்ச்சகம்
பொருளாதார விவகாரங்கள் துறை
புதுதில்லி, ஏப்ரல் 19, 2017
அறிவிக்கை
பிரதான் மந்திரியின் கரீப் கல்யாண் வைப்பு திட்டத்தில் மாற்றம் – அறிவிப்பு எண் S.O.4061 E
1. S.O. நிதிச் சட்டம் 2016 (28 of 2016)-ன் 199B உட்பிரிவு (c) மூலம் வழங்கப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி (இனிமேல் இச்சட்டம் என்று குறிப்பிடப்படும் ) மத்திய அரசாங்கம் பிதான் மந்திரியின் கரீப் கல்யாண் வைப்பு திட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
டிசம்பர் 16, 2016 தேதியிட்ட அறிவிப்பு எண் S.O. 4061 E -ல் வெளியிடப்பட்ட திட்டத்தில் ஜனவரி 19, 2017 தேதியிட்ட அறிவிப்பு எண் S.O. 204 E -, மேலும் பிப்ரவரி 07, 2017- தேதியிட்ட அறிவிப்பு எண் S.O. 365 E -மூலம் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
முதன்முதலில் வெளியிட்ட அறிவிப்பின் பிரிவு 5-ல் கீழ்க் கண்டபடி மாற்றம் செய்யப்படும்.
“5. வைப்புத் தொகை கணக்கில் கொள்ளப்படும் தேதி – பத்திரங்களின் லெட்ஜர் கணக்கு தொடங்கும் தேதியானது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி வைப்புத் தொகையை வாங்கும் தேதியாகும். அதற்கு உரிய வரி, சர்சார்ஜ் மற்றும் அபராதம் மார்ச் 31, 2017 தேதிவரை வாங்கப்பட்டிருக்கும்.
மேலும் வைப்புக்கான நாள் ஒருபொழுதும் ஏப்ரல் 30, 2017 க்கு மேல் நீட்டிக்கப்படமாட்டாது.“ |