RBI/2016-17/258
Ref. No. FIDD. CO. LBS. BC. 24/02.08.001/2016-17
மார்ச் 27, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர்
அனைத்து முன்னோடி வங்கிகள்
அன்புடையீர்
மணிப்பூர் மாநிலத்தில் 7 புதிய மாவட்டங்களை உருவாக்குதல் –
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு
மணிப்பூர் அரசாங்கம் மார்ச் 09, 2017 தேதியிட்ட FIDD. CO. LBS. BC. 23 / 02.08.001 / 2016-17 சுற்றறிக்கையில், அம்மாநிலத்தில் உருவாகவுள்ள ஏழு புதியமாவட்டங்களுக்கு முன்னோடி வங்கியின் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
2. மணிப்பூர் அரசாங்கம் தனது டிசம்பர் 14, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில் திருத்தம் செய்து அம்மாநிலத்தில் கீழ்கண்டவாறு, சேனாப்பட்டி மற்றும் கங்க்போக்பி மாவட்டங்களை உப பிரிவுகளாகப் பிரித்து ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
வரிசை
எண் |
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம் |
முந்தைய மாவட்டம் |
புதிய மாவட்டத்தின் கீழ் உள்ள உட்பிரிவு |
பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னணி வங்கி |
புதிய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீடு |
1. |
சேனாபட்டி |
சேனாபட்டி |
1. தடுபி,
2. பாமடா,
3. புருல்,
4. வில்லாங்,
5. சிலிவை பாய்பங்,
6. சோங்-சோங் மற்றும்
7. லைரௌசிங் |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா |
150 |
2. |
கங்க்போக்பி |
சேனாபட்டி |
1. கங்க்போக்பி,
2. சம்பாய்,
3. சைட்டு கம்பாசோல்
4. காங்க்சுப் ஜெல்ஜாங்
5. துய்ஜங் வாய்ஜோங்
6. சைகுல்
7. லங்டின்
8. ஐலேன்டு மற்றும்
10. பங்டீ ஜிரு |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா |
388 |
3. மார்ச் 09, 2017 தேதியிட்ட மேற்குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் வேறு மாற்றம் ஏதுமில்லை.
இங்ஙனம்
(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்
|