Notifi. 2016-17/257
Ref. No. DPSS. CO. CHD. 2695/03.01.03/2016-17
மார்ச் 25, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர்
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டயலிடப்பட்ட வணிக வங்கிகள்
பிராந்திய கிராமப்புற் வங்கிகள்
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
மாநிலக் கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
வட்டார வங்கிகள் உட்பட
மார்ச் 25, 2017-லிருந்து ஏப்ரல் 01, 2017 வரை
பணப்பட்டுவாடா தீர்வு முறை வசதிகள் திறந்திருக்கும்
மார்ச் 23, 2017 தேதியிட்ட சுற்றறிக்கைகள் DPSS. CO. CHD. No. 2656/03.01.03/2016-17-யில் “மார்ச் 30 மற்றும் 31, 2017-ல் சிறப்பு தீர்வு முறை நடவடிக்கைகள்“ பற்றியும், மற்றும் மார்ச் 24, 2017 தேதியிட்ட DBR. No. Leg. BC. 55/09.07.005/2016-17-யில் “அனைத்து முகமை வங்கிகளும் பொதுமக்களுக்காக மார்ச் 25, 2017-லிருந்து ஏப்ரல் 01, 2017 வரை திறந்திருக்கும்” என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கவும்.
2. தற்போதைய நிதியாண்டின் (2016-17) மார்ச் 31, 2017 வரையிலான அரசாங்க பரிவரித்தனைகளின் கணக்குகளை எளிதாக்க, நிகழ்நேர தீர்வுமுறை (RTGS), தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT) போன்ற சிறப்புத் தீர்வு முறை நடவடிக்கைகள் மார்ச் 25-லிருந்து ஏப்ர 01, 2017 வரை சாதாரண வேலை நாட்களைப் போல இயங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது (சனி, ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை நாட்கள் உட்பட). இது தவிரவும் அனைத்து உறுப்பினர் வங்கிகளும், நிகழ்நேர தீர்வுமுறை மற்றும் தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (RTGS & NEFT) போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுத் தீர்வு முறை நடவடிக்கைகளுக்கான மார்ச் 30 மற்றும் 31, 2017 நாட்களில் அதிகரிக்கப்பட்ட வேலை நேரம் குறித்து தனியாக ஒளிபரப்புச் செய்தியின் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இங்ஙனம்
(நந்தா S. தவே)
தலைமைப் பொதுமேலாளர் (பொறுப்பு) |