அனைத்து முகமை வங்கிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மார்ச் 25, 2017-லிருந்து ஏப்ரல் 01, 2017 வரை திறந்திருக்கும் |
Notifi. 2016-17/256
Ref. No. DBR. Leg. BC. 55/09.07.005/2016-17
மார்ச் 24, 2017
அனைத்து முகமைmm வங்கிகள்
அன்புடையீர்
அனைத்து முகமை வங்கிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக
மார்ச் 25, 2017-லிருந்து ஏப்ரல் 01, 2017 வரை திறந்திருக்கும்
அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை எளிதாக்க எல்லா சம்பள மற்றும் கணக்கு அலுவலகங்கள் ஏப்ரல் 01, 2017 வரை திறந்திருக்கவேண்டும் / செயல்படவேண்டும் என அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி எல்லா முகமை வங்கிகளும் அரசு வர்த்தகத்தைக் கையாளும் அவற்றின் கிளைகளை தற்போதைய நிதியாண்டில் எல்லா நாட்களிலும் (சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட) ஏப்ரல் 01, 2017 அன்றும் திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்பதை உரியவகையில் வங்கிகள் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம்.
இங்ஙனம்
(ரஜிந்தர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர் |
|