RBI/2016-2017/170
DPSS CO PD No. 1421/02.14.003/2016-17
டிசம்பர் 02, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /
அனைத்து அட்டை நெட்வொர்க் வழங்குபவர்கள் /
வெள்ளை லேபில் ஏடிஎம் ஆபரேட்டர்கள் /
பேமண்ட் வங்கிகள் / சிறுநிதி வங்கிகள்
அன்புடையீர்
ஆதார் அடிப்படையில் அட்டைகள் அளிக்கும் பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்படுதல்
செப்டம்பர் 29, 2016 தேதியிட்ட எங்களின் DPSS.CO.PD.No. 892/02.14.003/2016-17 சுற்றறிக்கையைப் பார்க்கவும். அதன்படி, ஜனவரி 01, 2017 முதல் ஆதார் அடிப்படையில், பயோமெட்ரிக் வகையில் ஊர்ஜிதப்படுத்தபடும் முறையைப் பின்பற்றி பணப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தலாம் என்று வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
2. ஆதார் அடிப்படையிலான கருவிகள் தேவைக்கேற்ற அளவிற்கும் குறைவாக கிடைப்பதால், இதில் செயல்பாட்டின் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என்பது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையிலான கருவிகளின் உதவியோடு பரிவர்த்தனை செய்பாட்டை அமல்படுத்தும் காலம் ஜூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கிகள் இவற்றை ஆதரிக்கும் முகவர் முனையம், நெட்வொர்க் நிலை மற்றும் கருவிகளின் தயார் நிலை ஆகியவற்றில் மாற்றங்களைக் கொணர்ந்து தேவையான ஏற்பாடுகளை வங்கிகள் தொடர்ந்து செய்திடவேண்டும்.
3. செப்டம்பர் 29, 2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்கள் புதிய கார்டுகளை ஏற்கும் அமைப்பு முறைமைகளுக்கு உரியவை. ஆனால், நடப்பிலுள்ள வசதிகளின்படி, ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் முறையில் பணப்பரிவர்த்தனைகள் செய்வதற்கான கால வரம்பு காலப்போக்கில் அறிவிக்கப்படும்.
4. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007 (2007-ன் 51வது சட்டம்) சட்டப்பிரிவு எண் 10 (2) மற்றும் பிரிவு 18-ன் படி இந்த வழிகாட்டுதல் வெளியிடப்படுகிறது.
5. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(நந்தா S. தவே)
தலைமைப் பொதுமேலாளர் |