அறிவிப்பு எண் 169
Ref. No. DCM (Plg) 1508/10.27.00/2016-17
டிசம்பர் 02, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பணக்கருவூலகக் கிளைகள் கொண்ட அனைத்து வங்கிகள்
அன்புடையீர்
வங்கி நோட்டுகள் ஒதுக்கீடு
ராபி பருவப் பயிர் விவசாயத்திற்கு பணம் அளித்தல் – வங்கிகளுக்கு அறிவுரை என்பது குறித்த எங்களின் நவம்பர் 22, 2016 தேதியிட்ட DCM (Plg.) No. 1345/10.27.00/2016-17 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.
2. மேற்குறிப்பிட்டதைத் தொடர்ந்து, கிராமப்புற வங்கிக் கிளைகள், அஞ்சலகங்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்குப் பணம் போதுமான அளவில் ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிசெய்திடவேண்டும். இதன் பொருட்டு, மாநில வங்கிகள் குழுமத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள்) இவற்றில் ஈடுபடுத்தி, கருவூலக் கிளையிலிருந்து, பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டமிடப்பட்டு விநியோகம் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3. கருவூலம் உள்ள வங்கிகள் தங்களின் கிளைகளுக்கே பணம் அளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு கருத்து உருவாகி உள்ளது. ஆகவே, இந்த கருத்தை முறியடிக்கும் வகையில் செய்லபட்டு, தத்தம் கிளைகளுக்கும் இதர வங்கிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் பணத்தை அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இங்ஙனம்
(சுமன் ரே)
பொதுமேலாளர் |