அறிவிப்பு எண் 154 Ref. No. DCM (Plg) 1384/10.27.00/2016-17
நவம்பர் 24, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் / வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – ஓய்வூதியதாரர்கள் மற்றும் ராணுவ வீர்ர்கள்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டபின், அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், மின்னணு பரிமாற்ற முறையின் மூலம் பெற்ற தங்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையை வங்கிக் கணக்கிலிருந்து பணமாக எடுக்க நேரிடும்.
2. வங்கிகள் இவ்வாறு எடுக்க நேரிடும் பணத் தேவைகளை எதிர்கொள்ள பின்வருமாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
ஓய்வூதியதாரர்களின் தேவைகளை அனுசரித்துத் தரும் வகையில் போதுமான அளவு பணம் இருப்பதை உறுதிசெய்திடவேண்டும்.
ரணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ராணுவ முகாம்களில் பணப்பட்டுவாடா செய்யப்படத் தேவையான அளவு பணம் இருப்பதை உறுதிசெய்திடவேண்டும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்) தலைமைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்