Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (134.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/11/2016
வங்கிக் குழுமங்களுக்குப் பயன்படக்கூடிய அனுபவ அறிவு, சிறப்புத் திறமைகள்

அறிவிப்பு எண் 152
Ref. No. DBR.Appt.BC.No.39/29.39.001/2016-17

நவம்பர் 24, 2016

அனைத்து வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

வங்கிக் குழுமங்களுக்குப் பயன்படக்கூடிய அனுபவ அறிவு, சிறப்புத் திறமைகள்

அனைத்து வணிக வங்கிகளின் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக) நிர்வாக மன்றக்குழு இயக்குநர்களாக இருப்பவர்களுக்குத் துறை சார்ந்த அறிவும், அனுபவமும் தேவை என்று பல்வேறு சட்டரீதியான அறிவுறுத்தல்கள் தெரிவித்துள்ளன. வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றங்களின் பின்னணியில் பார்த்தால், இயக்குநர்களுக்குத் தேவைப்படும் அறிவு, அனுபவம் இவற்றோடு கூடவே சில சிறப்புப் பிரிவுகளில் அறிவும், அனுபவமும் பெறுவது அவசியம். ஏனெனில், வங்கிகளின் வர்த்தகப் பிரிவுகளில் தோன்றியுள்ள மாறுதல்கள் மற்றும் நேரிடர்களின் பல்வேறு பகுதிகளை மேலாண்மை செய்திட இது அவசியம் என்று தொன்றுகிறது. இத்தகு சிறப்புப் பிரிவுகள் என்பனவற்றில் (i) தகவல் தொழில்நுட்பம், (ii) பணம் செலுத்துதல் மற்றும் பட்டுவாடா முறைமைகள், (iii) மனிதவள மேலாண்மை, (iv) நேரிடர் (இடர்வரவு) மேலாண்மை, மற்றும் (v) வர்த்தக மேலாண்மை ஆகியவை அடங்கும். இவற்றில் சிறந்த அனுபவமும், அறிவும் பெற்றவர்களை வங்கிகளின் நிர்வாக மன்றக் குழு இயக்குநர்களாக நியமிக்கக் கருதலாம்.

2. இது குறித்த நவம்பர் 24, 2016 தேதியிட்ட அறிவிக்கை DBR. Appt. BC. No. 38/29.39.001/2016-17, இணைக்கப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(அஜய் குமார் சௌத்ரி)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு: அறிவிக்கை


DBR. Appt. BC. No. 38/29.39.001/2016-17

நவம்பர் 24, 2016

வங்கிக் குழுமங்களுக்குப் பயன்படும் சிறப்பு அறிவு, அனுபவம்

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு எண் 10A (2 )(a) (ix), SBI Act 1955 சட்டப்பிரிவு 19A(1)(a)(viii), SBI (Subsidiary Banks) Act 1959, சட்டப்பிரிவு எண் 25A(1) (a) (viii) வங்கிக் கம்பெனிகள் (கைகொள்ளுதல் மற்றும் பொறுப்பு மாற்றம்) சட்டம் 1970 / 1980-ன் சட்டப்பிரிவு எண் 9 (3A) (A) (viii) ஆகியவற்றினால் வழங்கப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி பின்வருமாறு அறிவிக்கிறது – (i) தகவல் தொழில்நுட்பம், (ii) பணக்கொடுப்பு, பட்டுவாடா மற்றும் தீர்வுமுறைத் துறை, (iii) மனிதவளம் (iv) நேரிடர் மேலாண்மை (v) வர்த்தக மேலாண்மை ஆகிய பிரிவுகள் சார்ந்த விவரங்களில் சிறந்த அறிவும் அனுபவமும் வாய்த்தவர்கள் வங்கிக் கம்பெனி, SBI, Subsidiary Bank மற்றும் தொடர்புடைய புதிய வங்கிக்கும் நிலைக்கேற்ப உதவிகரமாக இருப்பார்கள்.

(சுதர்சன் சென்)
நிர்வாக இயக்குநர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்