அறிவிப்பு எண் 189
Ref. No. DCM (Plg) 1859/10.27.00/2016-17
டிசம்பர் 19, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும்
நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – வங்கிக் கணக்கில்
குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்தல்
நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்வது குறித்து அதன் பாரா 3-ன் ii, iii மற்றும் iv பகுதிகளில் உள்ள கருத்துக்கள் மறுஆய்வு செய்யப்பட்டன. அதன்படி குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை “பிரதான் மந்திரி கரீப் கல்யாண்யோஜனா 2016 திட்டத்தின்” கீழ் வரி மற்றும் முதலீட்டுக்காக டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாதாரண வங்கிக் கணக்குகளில் அவற்றை டெபாசிட் செய்வதில் சில கட்டுப்பாடுகளை கீழ்க்கண்டவாறு விதிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
-
வங்கிக் கணக்கில் ஒருவர் ரூ. 5000-க்கும் அதிகமாக டெபாசிட் செய்ய விரும்பினால், இனி டிசம்பர் 30, 2016 வரையுள்ள எஞ்சிய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே டெபாசிட் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு டெபாசிட் செய்யப்படும்போது, வங்கி அதிகாரிகள் இருவர் முன்னிலையில் இது ஏன் முன்னர் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்து, அது பதிவு செய்யப்பட்டு திருப்திகரமான விளக்கம் பெற்ற பின்னரே அந்த டெபாசிட் தொகை ஏற்றுக்கொள்ளப்படும். இந்த விளக்கம் பின்னர் தணிக்கையின்போது உபயோகப்படும். ஒருங்கிணைக்கப்பட் கணினி வங்கிச் சேவைப் பிரிவில் (CBS) இது கணினியில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டவேண்டும். இதனால், மேலும் சில டெபாசிட்டுகள் இதே கணக்கில் வேறு கிளைகளில் செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.
-
ரூ. 5000 வரை குறிப்பிட்ட வங்கி நோட்டுகளில் செய்யப்படும் டெபாசிட்டுகள் டிசம்பர் 30, 2016 வரை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கணக்கில் வரவு வைக்கப்படும். ரூ.5000க்கும் குறைவாக டெபாசிட் செய்யப்பட்டாலும், ஒட்டு மொத்தத்தில் டெபாசிட் செய்த தொகை ரூ. 5000க்கும் அதிகமாக இருக்குமானால், மேற்குறிப்பிட்ட (i) நடைமுறையே பின்பற்றப்படும். மேலும், டிசம்பர் 30, 2016 வரை ரூ. 5000த்திற்கும் அதிகமான தொகை டெபாசிட்டாக ஏற்றுக்கொள்ளப்படாது.
-
ரூ.5000த்திற்கும் அதிகமாக குறிப்பிட்ட வங்கி நோட்டுகளில் செலுத்தப்படும் டெபாசிட்டுகள் KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்படும். KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத கணக்குகள் இருப்பின், அவற்றில் ரூ. 50000 வரை மட்டுமே, அந்த கணக்குகள் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்து டெபாசிட்டுகள் அனுமதிக்கப்படும்.
-
பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் 216-ன் கீழ் வரி மற்றும் முதலீட்டுக்காக குறிப்பிட்ட வங்கி நோட்டுகளில் செலுத்தப்படும் டெபாசிட்டுகளுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் பொருந்தாது.
-
எந்தவொரு வங்கியிலும் பராமரிக்கப்படும் எந்தவொரு வங்கிக் கணக்கிலும் ஒரு நபர் குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்தால் அதன் மதிப்பு நடப்பிலுள்ள வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி, அடையாள சான்றாவணம் சரியாக இருப்பின், செலுத்தும் நபரின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை வரவு வைக்கப்படும்.
-
மூன்றாம் நபருக்காக ஒருவர் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்ய விரும்பினால், அதற்கு உரிய அதிகாரமளிக்கும் கடிதம், மற்றும் பணம் செலுத்தும் நபரின் அடையாள சான்றாவணம் ஆகியவை காட்டப்பட்டால், மூன்றாம் நபரின் வங்கிக் கணக்கில், நடப்பிலுள்ள நடைமுறையைப் பின்பற்றி செலுத்தப்பட்ட நோட்டுகளின் மதிப்பு வரவு வைக்கப்படும்.
2. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பிட்டுள்ளபடி
தொடர்புடைய இணைப்புகள் |
டிசம்பர் 16, 2016 |
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் 2016 (PMGKDS) |
டிசம்பர் 16, 2016 |
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் 2016 (PMGKDS) |
டிசம்பர் 16, 2016 |
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் 2016 (PMGKDS) – செயல்பாட்டு வழிமுறைகள் |
டிசம்பர் 16, 2016 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் 2016 (PMGKDS) |
|