RBI/2016-17/102
DCM (FNVD) No.1134/16.01.05/2016-17
அக்டோபர் 27, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து வங்கிகள்
அன்புடையீர்
கள்ள நோட்டுகளைக் கண்டறிதல் மற்றும் பறிமுதல்
சமூக அக்கறையில்லாத நேர்மையற்ற சில சக்திகள், சாதாரண பணப் பரிவர்த்தனைகளில் எளிதில் சந்தேகப்படாத, ஏமாறக்கூடிய சிலரின் பண்புகளை சாதகமாக்கிக்கொண்டு உயர் மதிப்பிலக்க கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
2. ஆகவே, பொதுமக்கள் தங்களின் தினசரிப் பரிவர்த்தனைகளின்போது நோட்டுகளை கவனமாகப் பார்த்து வாங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுமாறு பத்திரிக்கை வெளியீட்டின் மூலம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் கள்ளநோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவிட முடியும்.
3. இது தொடர்பாக கள்ளநோட்டுகளை கண்டுபிடித்து விலக்குதல் பற்றிய ஜூலை 20, 2016 தேதியிட்ட மூலச்சுற்றறிக்கை DCM (FNVD) No. G-6/16.01.05/2016-17-ஐப் பார்க்கவும். அதன்படி, வங்கிகள் கள்ளநோட்டுகள் எந்தவகையிலும் வங்கி முறைமையில் நுழையாததை உறுதி செய்வதோடு, அவைகளை உடனடியாகக் கண்டறிந்து விலக்கிட வேண்டும். வங்கிகள் ஒருபோதும் இத்தகு நோட்டைக் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்கவோ அல்லது வேறொருத்தருக்குத் தரவே கூடாது. வங்கிக் கிளைகள் அனைத்திலும், அல்ட்ரா வயலட் விளக்குகள் / நோட்டுகளைப் பிரித்தெடுக்கும் / கள்ளநோட்டு கண்டுபிடிக்கும் எந்திரங்கல் வைக்கப்படவேண்டும். வங்கிகள் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ரூ. 100 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பிலக்க நோட்டுகளை எந்திரங்களில் போட்டு பரிசோதித்த பின்பே, மீண்டும் புழக்கத்திற்குக் கொடுக்குவேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் (தினசரி பரிவர்த்தனை செய்யும் பணத்தின் அளவு எதுவாயினும்) பொருந்தும். இந்த அறிவுறுத்தலின்படி வங்கிகள் யெல்படாவிட்டால், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நவம்பர் 19, 2009 தேதியிட்ட வழிகாட்டுதல் எண் 3158/09.39.00(கொள்கை)/ 2009-10-ஐப் புறக்கணித்ததாகக் கருதப்படும்.
4. வங்கிகளில் பணத்தைக் கையாளும் முகப்பிலுள்ள பணியாளர்கள் மற்றும் பின்புலப் பணியாளர்கள் அனைவரும் வங்கி நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பயிற்சியைப் பெற்று அதில் சரளமான அறிவு பெற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்திடவேண்டும். வங்கிப் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ளநோட்டுகளையறிதல் குறித்த விவரங்களை https://paisaboltahai.rbi.org.in –ல் உள்ளன என்பது அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும்.
5. கள்ளநோட்டுப் புழக்கத்திற்கு உடந்தையாக இருப்பவர்களைக் கண்டறிய ஏதுவாக வங்கிகள் தங்களின் பணப்பரிவர்த்தனை இடங்களில் சிசிடீவீ (CCTV) கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி தினசரி நடவடிக்கைகளைப் பதிவு செய்யவும், பதிவுசெய்ததைப் பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
6. வங்கிகள் கள்ள நோட்டுகளைக் கண்டறிந்து, நீக்கவும், அத்தகு நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு விடப்படாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டுவது அவசியம். தவறினால், வங்கிகள் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை மீறியதாகக் கருதி அவற்றின்மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
7. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பிட்டபடி |