சாவரின் தங்கப் பத்திரங்கள் – அதிகபட்ச முதலீட்டு வரம்பு மற்றும் இணைப்பிணையத்தை ஏற்பது – தெளிவாக்கம் |
RBI/2016-17/96
IDMD.CDD.No. 892/14.04.050/2016-17
அக்டோபர் 20, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
குறிப்பிடப்பட்ட அஞ்சலகங்கள்
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிட்.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆஃப் இந்தியா லிட்.
மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்
அன்புடையீர்
சாவரின் தங்கப் பத்திரங்கள் – அதிகபட்ச முதலீட்டு வரம்பு மற்றும் இணைப்பிணையத்தை ஏற்பது – தெளிவாக்கம்
அரசுப் பத்திரங்கள் சட்டம் 2006 (2006-ன் 38) பிரிவு 3-ன் ஷரத்து (iii) அளித்துள்ள அதிகாரங்களின்படி இந்திய அரசு சாவரின் தங்கப்பத்திரத் திட்டத்தை அறிவித்ததை நீங்கள் அறிந்ததே. இந்தத் திட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், ஒரு நிதியாண்டில் ஒரு நபர் அதிகபட்சமாக 500 கிராம்களுக்கு மேல் பத்திரங்களை வாங்கக் கூடாது. இந்தத் திட்டம் தொடர்பாக, வங்கிகள் மற்றும் இதர பிரிவுனரிடமிருந்து, இந்தப் பத்திரங்களை வைத்துக் கடன் வாங்கும் வாய்ப்பு மற்றும் மாற்றிக் கொடுப்பதன் மூலம் பெறப்படுபவைகளுக்கு வாங்குவதற்கான உச்ச வரம்பு பொருந்துமா என்று கேள்விகள் எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன.
இது தொடர்பாகக் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது –
-
அரசுப் பத்திரங்கள் சட்டத்தின் பிரிவு 3 (iii)-ன் கீழ் வெளியிடப்படும் சாவரின் தங்கப் பத்திரங்கள் (SGB) அரசுப் பத்திரங்கள் ஆகும். அதனை வைத்திருப்பவர் அடகு வைக்கலாம், ஹைபோதெகேட் செய்யலாம் அல்லது லீனுக்கு உட்படுத்தலாம் (ஜி.செக் சட்டம் 2006ல் ஷரத்துகளுக்கு ஏற்ப / ஜி.செக் ஒழுங்கு முறைகள் 2007), எஸ்ஜிபிக்கள் எந்த ஒரு கடனுக்கும் இணைப் பிணையமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
-
வங்கிகள் மற்றும் இதர தகுதி வாய்ந்த வைத்திருப்போர், ஒரு நிதியாண்டில் SGB-க்களை 500 கிராம்களுக்கு மேல் பெறமுடியும். இவற்றை ரெகவரி நடவடிக்கைகள் உட்பட ஏற்படும். மாற்றிக் கொடுக்கும் வழிகளில் பெறமுடியும்.
இங்ஙனம்
(ராஜேந்திர குமார்)
பொதுமேலாளர் |
|