அறிவிப்பு எண் 165
Ref.No.DCM (Plg) 1450/10.27.00/2016-17
நவம்பர் 29, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
PMJDY பிரைம் மினிஸ்டர் ஜன்தன் யோஜனா கீழ் உள்ள கணக்குகள் – எச்சரிக்கை நடவடிக்கைகள்
“பணம் எடுத்தல் – வாராந்திர வரம்பு“ என்பது குறித்து எங்களின் நவம்பர் 25, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM (Plg.) No.1424/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகள், கருப்புப் பணப் பேர்வழிகளின் செய்கைகளால் பாதிக்கப்பட்டு, பினாமி சொத்துப் பரிவர்த்தனை மற்றும் கருப்புப்பண ஒழிப்புச் சட்டத்தின் பிடியில் சிக்கி, மோசமான விளைவுகளை சந்திப்பதைத் தடுக்கும் பொருட்டு, பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவம்பர் 09, 2016க்குப் பிறகு பழைய ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் PMJDY கணக்குகளில் செலுத்தப்படுமானால், அத்தகைய கணக்குகளில் நடைபெறும் பரிவர்த்தனைகள் பின்வரும் வகையில் கவனிக்கப்படும்.
-
KYC தேவைகள் முழுவதுமாகப் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகளிலிருந்து, ஒரு மாதத்தில் ரூ.10,000 வரை எடுக்க அனுமதி அளிக்கப்படலாம். ரூ. 10,000-த்திற்கும் அதிகமாக எடுக்கவேண்டுமானால், உரிய காரணங்கள் நேர்மையானதாக இருக்குமானால் அதைத் தெரிந்து கொண்டபின், நடப்பிலிருக்கும் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் கணக்கிலிருந்து பணமெடுக்க வங்கிக்கிளை மேலாளர் அனுமதிக்கலாம். அவற்றை வங்கிகயின் பதிவேட்டில் பதிவு செய்வதும் அவசியமாகும்.
-
நவம்பர் 09, 2016க்குப் பிறகு, குறிப்பிட்ட நோட்டுகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை, KYC நிபந்தனைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத கணக்குகளிலிருந்து எடுக்க வேண்டுமானால், மாதத்திற்கு 5000 வரை, ஒட்டுமொத்த வரம்பான ரூ. 10,000-ற்குள் எடுக்க அனுமதி அளிக்கப்படலாம்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |