அறிவிப்பு எண் 147
Ref. No. DCM (Plg)/1341/10.27.00/2016-17
நவம்பர் 22, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன –
மோசடியான செயல்பாடுகள் மேற்குறிப்பிட்ட வங்கி நோட்டுகளைப் பணமாக மாற்றும்போதோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்போதோ, சில வங்கி அதிகாரிகள், சில மோசடிப் பேர்வழிகளின் துணையுடன் மோசடியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
2. ஆகவே, வங்கிகள் இத்தகு மோசடியான செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்திடவேண்டும். மேலும், கூர்ந்த கண்காணிப்பின் மூலம் இத்தகு மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
3. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தல் மற்றும் முகப்புகளில் மாற்றுதல் குறித்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை, வங்கிகள் ஒழுங்காக கடைபிடிப்பது உறுதிப்படுத்தப் படவேண்டும். இதன்பொருட்டு, வங்கிக் கிளைகள் கீழ்க்கண்டவற்றிற்கான பதிவுகளைப் பராமரித்தல் அவசியம்.
-
நவம்பர் 10, 2016 முதல் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட குறிப்பிட்ட நோட்டுகள், இதர மதிப்பிலக்க நோட்டுகளின் மதிப்பிலக்கவாரியான தகவல்கள் விவரமாக சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டும்.
-
வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வந்துபோகும் வாடிக்கையாளர்கள் மாற்றியுள்ள குறிப்பிட்ட வங்கி நோட்டுகளின் விவரங்கள் வாடிக்கையாளர் வாரியாக, மதிப்பிலக்க விவரங்களுடன் பராமரிக்கப்படவேண்டும்.
வங்கிகள் மேற்குறிப்பிட்ட இத்தகவல்களை குறுகிய கால அவகாசத்தில் உடனடியாக அளித்திடத் தயார்நிலையில் இருக்கவேண்டும்.
4. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்
|