500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – திருத்தங்கள் |
அறிவிப்பு எண் 146
Ref. No. DCM (Plg)/1323/10.27.00/2016-17 நவம்பர் 21, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன –
திருத்தங்கள்
மேற்குறிப்பிட்ட பொருள் குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும்.
2. மறு ஆய்வின் பேரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்புகளில் பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
விவசாயிகளுக்கு: விவசாயிகள் தங்களின் சேமிப்பு / கடன் கணக்குகளிலிருந்து (கிஸான் கிரெடிட் கார்டு வரம்பு உட்பட) ஒரு வாரத்திற்கு ரூ. 25,000 வரை பணம் எடுக்கலாம். ஆனால், இத்தகு கணக்குகளில் நடப்பிலுள்ள கே.வொய்.சி (KYC) நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படிருக்கவேண்டும்.
- APMC சந்தைகள் / மண்டிகளில் பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு
தற்சமயம் நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அவற்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வசதி APMC சந்தைகள் / மண்டிகளில் பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கு இப்போது அளிக்கப்படுகிறது. இத்தகு வியாபாரிகள் KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட, கடந்த 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள நடப்புக் கணக்குகளிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை பணம் எடுக்கலாம்.
3. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
இங்ஙனம்
(P.விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்
|
|