அறிவிப்பு எண் 141
Ref. No. DCM (Plg) 1304/10.27.00/2016-17 நவம்பர் 20, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன –
உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது
மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 13, 2016 தேதியிட்ட DCM (Plg) 1272/10.27.00/2016-17 சுற்றறிக்கையின்பத்தி 1 (ii) ஐப் பார்க்கவும். அதன்படி கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்ட ஏடிஎம்-களிலிருந்து தினசரி எடுப்பதற்கான பணத்தின் வரம்பு ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர ஏடிஎம்-களில் கணிப்புக் கூறு மாற்றப்படும் வரை வரம்பு ரூ.2,000 ஆகவே இருக்கும்.
2. ஏடிஎம்-களில் கணிப்புக் கூறு மாற்றப்படும் செயல்முறை கவனமாகக் கண்காணிக்கப்பட்டு அதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மறு ஆய்வின்பேரில் மேலும் உத்தரவுகள் வரும்வரை வரம்பில் மாற்றம் ஏதுமின்றி தொடர முடிவுசெய்யப்பட்டுள்ளது. கணிப்புக் கூறு மாற்றப்படும் வரை இத்தகு ஏடிஎம்-கள் மூலம் வங்கிகள் ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து வழங்கலாம்..
3. இதைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(சுமன் ரே)
பொதுமேலாளர்
|