அறிவிப்பு எண் 135
Ref.No.DCM(Plg) 1287/10.27.00/2016-17
நவம்பர் 16, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – வருமானவரி விதிகள் 1962-ல் 114B-ன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல்
நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். வருமானவரி விதிகள் 1962-ன் 114B-ல் உள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பாக வங்கிகள் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
i. வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு எண்ணோடு பிணைக்கப்படாதிருந்தால், வாடிக்கையாளர் ரூ. 50000-க்கும் அதிகமாக பணத்தை டெபாசிட் செய்யும்போது, வருமானவரிக்கணக்கு அட்டையின் நகலைச் சமர்ப்பிக்கவேண்டும்.
ii. மேற்குறிப்பிட்ட நிபந்தனையோடு, வருமானவரிக் கணக்கு எண் குறிப்பிடப்பட வேண்டிய இதர பரிவர்த்தனைகளின்போதும் வங்கிகள் அவற்றை வலியுறுத்த வேண்டும்.
2. ஆகவே, வங்கிகள் மேற்குறிப்பிட்டவற்றை கருத்தில்கொண்டு, வருமானவரி விதிகள் 1962-ன் விதி 114B-ல் உள்ள நிபந்தனைகளை (இணைக்கப்பட்டுள்ளது) சீராகக் கடைபிடிக்கவேண்டுவது அவசியமாகும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பிட்டுள்ளபடி |