அறிவிப்பு எண் 133
Ref. No. DCM (Plg) 1280/10.27.00/2016-17
நவம்பர் 15, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
வங்கிகளில் குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை மாற்றவரும் வாடிக்கையாளர்களின் கைவிரலில் அழிக்கமுடியாத மைக்குறி இடுவது குறித்த சீரான செயல்பாட்டுமுறை
நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த எங்களின் சுற்ற்றிக்கை No. DCM (Plg)/1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். பல்வேறு வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ஒரு சீரான செயல்பாட்டு முறையை அமல் செய்வது முக்கியம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்ப பின்வரும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
i. வாடிக்கையாளர் குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை வங்கிக்கிளை மற்றும் அஞ்சலகங்களில் மாற்றவரும்போது, அவர்களின் வலதுகை ஆள்காட்டிவிரலில் அழியாத மையால் குறியிடவேண்டும். இதனால், அவர்கள் ஒருமுறை மட்டுமே குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை முகப்பில் மாற்றியுள்ளார்கள் என்பது தெரியவரும்.
ii. வங்கிகள் / அஞ்சலகங்களுக்கு இந்த மையை இந்திய வங்கிகள் சங்கம், வங்கிகளுடனும், இந்திய வங்கியுடனும் ஒருங்கிணைந்து அளிக்கும்.
iii. முதல் கட்டமாக இந்த நடைமுறை பெருநகரங்களில் தொடங்கப்படும். பின்னர் இதர இடங்களுக்கும் விரிவாக்கப்படும்.
iv. ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் இந்த கருப்பு மை 5 மி.லி. பாட்டில்களில் ஒரு சிறிய பிரஷ்ஷுடன் கொடுக்கப்படும்.
v. காசாளர் அல்லது இதற்கென குறிக்கப்பட்ட அதிகாரி ரூபாய் நோட்டுகள் கொடுப்பதற்கு சிறிது நேரம் முன்னதாக, வாடிக்கையளரின் விரலில், இந்த மையால் குறியிட்டு அதை அழிப்பதற்கு இடங்கொடாமல் அவருக்கு ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும்.
vi. இடதுகையில் ஆட்காட்டிவிரலிலோ அல்லது வேறெந்த விரலிலோ மைக்குறியீடு இருந்தால், அதை மட்டுமே காரணமாக்கி, பழையநோட்டுகளை மாற்றித்தர வங்கிகள் மறுக்கக்கூடாது.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |