அறிவிப்பு எண் 131
Ref. No. DCM (Plg) 1274/10.27.00/2016-17
நவம்பர் 14, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்குமான வசதிகளை அதிகப்படுத்துதல்
நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த எங்களின் சுற்ற்றிக்கை No. DCM (Plg) / 1226 /10.27.00 / 2016-17-ஐப் பார்க்கவும். குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றவும், கணக்கில் டெபாசிட் செய்யவும், வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கவும் உள்ள வசதிகளை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முடிந்த அளவு சௌகரியங்களைச் செய்து தரவும் பின்வரும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
கூடுதல் வசதிகள்
-
நடப்புக்கணக்கு வைத்திருப்போர் (கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக செயல்படும் வகையில் உள்ள நடப்புக் கணக்குகள்) ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவை பெரும்பாலும் ரூ.2000 மதிப்பிலக்கத்தில் வழங்கப்படும்.
-
கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், காவல் நிலையங்கள் / காவல் / ராணுவ எல்லை சோதனைச் சாவடிகள், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அல்லது வேறு பாதுகாப்பான இடங்களில் வங்கிகள் தங்களின் குறு ATM-களை (பாலமித்ரா போன்றவை) அமைக்கலாம். இதன்மூலம் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட நேரிடும். ஆகவே, இவற்றின் உச்சவரம்பை ரூ.50,000-ஆக உயர்த்தலாம். அவர்கள் அடிக்கடி பணம் மீட்டுப்பெறவும் அனுமதிக்கலாம்.
-
வங்கிகளில்லாத, பயண வசதிகள் அதிகமில்லாத ஊர்களில் பணத்தை மாற்ற, டெபாசிட் செய்ய, பணம் எடுக்க வங்கிகள் மொபைல் வேன்களை உபயோகிக்கக் கருதலாம்.
-
தேயிலை / காபித் தோட்டங்கள், சர்க்கரைக் கூட்டுறவு ஆலைகள், பால்பண்ணைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் அதிக அளவில் பட்டுவாடா செய்யும் மையங்களில் உள்ளவர்களுக்கு, வங்கிகள் முகாம் அடிப்படையில் கணக்குகள் தொடங்கி, அவற்றில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வசதகிளை செய்துதரவேண்டும்.
-
மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், வங்கிகளில் வேலைபளு அதிகமாவதால், ஓய்வுபெற்ற பணியாளர்களைக் குறுகியகாலத்திற்குப் பணியமர்த்தலாம்.
கண்காணிப்பு
-
வங்கிகள் குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை டெபாசிட் செய்ய, தனி டெபாசிட் ஸ்லிப் உபயோகப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும். வாடிக்கையாளர்கள் இரண்டையும் கலந்துவிடாமல், நோட்டுகளை இனம்பிரித்து டெபாசிட் செய்வதை உறுதிப்படுத்திடவேண்டும். வங்கிகளில் உள்ள CBS முறைமைகளில் டெபாசிட் செய்யப்படும் இந்த குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை வாடிக்கையாளர் / கணக்கு / கிளை வாரியாக கணக்கெடுப்பு செய்ய வசதியாகச் சில ஏற்பாடுகளை செய்திடவேண்டும். இவற்றைப் பின்னர் சோதித்து சரிபார்க்கவும் ஏற்பாடுகள் செய்திடவேண்டும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |