RBI/2016-17/125
Ref. No. DCM (Plg) 1264/10.27.00/2016-17
நவம்பர் 11, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
அன்புடையீர்
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது தொடர்பாக நவம்பர் 08, 2016 அன்று பணமேலாண்மைத் துறை மைய அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ன் பத்தி 4-ஐப் (அறிக்கை அளிக்கும் முறை) பார்க்கவும். இதன்படி வங்கிகள் குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் குறித்த தினசரி அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிடவேண்டுவது கட்டாயமாகும். இது தொடர்பாக வங்கிகள் அளிக்கும் அறிக்கையில் மாற்றப்பட்ட ரொக்க நோட்டுகள் மட்டுமின்றி, கணக்கில் வரவு வைக்கப்படும் நோட்டுகள் குறித்த தகவல்களும் அளிக்கப்படவேண்டும். இவற்றுள் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பற்றிய விவரமும் தினசரி அளிக்கப்படவேண்டும். ஆகவே, பின் இணைப்பு-6 மற்றும் 6A சற்றே திருத்தியமைக்கப்பட்டுள்ளன (இணைக்கப்பட்டுள்ளன). ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை 6A, மின்னஞ்சல் மூலம் மறுநாள் வேலை நேரமுடிவிற்குள் அனுப்பப்படவேண்டும்.
2. மேலும், மேற்குறிப்பிடப்பட்ட 2016-ம் ஆண்டு சுற்றறிக்கையின் பாரா 8-ல் குறிப்பிடப்பட்டது போல், வங்கிகள் தமது தொடர்பு அதிகாரிகளின் விவரங்களைப் பின்வரும் படிவத்தில் நவம்பர் 11, 2016 வேலைநேர முடிவிற்குள் மின்னஞ்சல் மூலம் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கவேண்டும்.
வங்கியின் பெயர் |
தொடர்பு அதிகாரியின் பெயர் |
தொலைபேசி எண் |
நகலனுப்பி எண் |
மொபைல் எண் |
மின்னஞ்சல் முகவரி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
(இது எக்ஸெல் [EXCEL] வடிவில் அனுப்பப்படவேண்டும்)
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |