RBI/2016-17/106
DCM (CC) No. 1170/03.41.01/2016-17
நவம்பர் 02, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து வங்கிகள்
அன்புடையீர்
ரூ. 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை அதற்கென
விசேஷ ஏடிஎம்களின் மூலம் விநியோகிப்பது
கரன்சி விநியோகம் மற்றும் மாற்றும் திட்டத்திற்கு (CDES) தொடர்பான எங்களது மே 05, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை DCM (CC) G-10/3352/03.41.01/2015-16-ஐப் பார்க்கவும்.
2. வங்கிகள் குறைந்த மதிப்பிலக்க நோட்டுகளுக்கென தனி ஏடிஎம்களை நிறுவுதல் குறித்து எடுத்துள்ள முயற்சிகளை மறுசீராய்வு செய்ததில், சில வங்கிகள் மட்டுமே முன்முயற்சி எடுத்து ரூ. 100 மதிப்பிலக்க வங்கிநோட்டுகள் உட்பட குறைந்த மதிப்பிலக்க நோட்டுகளை வழங்கும் ஏடிஎம்களை நிறுவியுள்ளன என்பது அறியப்பட்டது.
3. சுத்த நோட்டுக் கொள்கையின் நோக்கங்களின் அடிப்படையிலும் ரூ. 100 நோட்டுகளுக்கு பொதுமக்களிடையே உள்ள தேவையாலும், வங்கிகளின் ஏடிஎம்களில் ரூ. 100 நோட்டுகளை எடுப்பதற்காக மக்கள் கார்டுகளுடன் செல்லும்பொழுது ஏடிஎம்களில் ரூ. 100 வங்கி நோட்டுகளை மக்களின் பயன்பாட்டிற்காக வங்கிகள் வைத்திடவேண்டும்.
4. இந்தத் திசையில் வங்கிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக நாட்டில் உள்ள 10 சதவிகிதம் ஏடிஎம்களில் 10 சதவிகிதம் ரூ. 100 மதிப்பிலக்க நோட்டுகளாகவே கொடுக்குமாறு மாற்றி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது ஏடிஎம்களில் இத்தகைய ஏற்பாட்டிற்கு வசதி செய்திடும் வகையில் கணிப்புக் கூறுகளை மாற்றி அமைத்திட அறிவுறுத்துகிறோம்.
5. இவ்வகையில் இயந்திரங்களை மாற்றி அமைத்திடுவது அவ்வளவு கடினமானதல்ல என்பதால், சுற்ற்றிக்கை கிடைத்த 15 நாட்களுக்குள் செய்து முடித்து அது பற்றிய அறிக்கையை (இணைப்பில் உள்ள படிவத்தில்) அனுப்பிடவேண்டும். இவ்விஷயத்தில் வங்கிகள், பெரிய மையங்கள் / மாநிலங்களில் மாதிரி சர்வே எடுத்து, அதற்கான கிளைகளை தேர்ந்தெடுக்கலாம்..அமலாக்கத்திற்குப் பின் உங்கள் கருத்தை இரு மாதங்களுக்குப் பின் எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.
6. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே குறிப்பிட்டபடி
100 ரூபாய் நோட்டுகளுக்கென்று தனிப்பட்ட ஏடிஎம்கள்
வங்கியின் பெயர் –
வரிசை எண் |
மாநிலம் |
மாநகரம் / மாவட்டம் |
ஏடிஎம் இருக்கும் முகவரி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
(மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்) |