RBI/2016-17/111
DPSS CO PD No./02.10.002/2016-17
நவம்பர் 08, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து வணிக வங்கிகள் பிராந்திய வங்கிகள் உட்பட
நகரக் கூட்டுறவு வங்கிகள்
மாநிலக் கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
ஏடிஎம்கள் பழைய உயர் மதிப்பிலக்க நோட்டுகளை வழங்காது –
செயல்பாடு முடக்கம்
இந்திய அரசு உடனடியாக நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் அன்று வரை புழக்கத்திலிருக்கும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க நோட்டுகளை செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கியது. ஆகவே, நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் அனைத்து வங்கி ATM-கள் மூலம் இந்த நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் அவசியம் நேரிட்டது.
2. ஆகவே, இதற்கு ஏதுவாக அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை / அயல்நாட்டு / பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக்கூட்டுறவு வங்கிகள் / மாநிலக் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களின் பரிவர்த்தனைகளுக்கு நவம்பர் 09, 2016 அன்று மூடப்பட்டன.
3. மேற்குறிப்பிட்டதன் காரணமாக நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் அனைத்து ATM-களும் மூடப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதனால், அவை இந்த பழைய நோட்டுகளை வழங்குவது தடுக்கப்படும். பின்னர் ATM-களின் கணப்புக் கூறுகள் மாற்றியமைக்கப்பட்டு, நவம்பர் 11, 2016 முதல் அவை 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கத் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
4. வங்கிகள் மற்றும் ATM ஸ்விட்ச் ஆபரேட்டர்கள் இவற்றை அமலாக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக on-us மற்றும் off-us பரிவர்த்தனைகளிலும் செயல்படுத்திட வேண்டும்.
5. மேலும், வாடிக்கையாளர்களின் சௌகர்யத்தைக் கருத்தில்கொண்டு, வங்கிகள் டிசம்பர் 30, 2016 வரை வாடிக்கையாளர்களின் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் கட்டண் வசூலிக்கக்கூடாது. ஒரு அட்டைக்கு ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 2000 எடுக்குபடியாக உச்சவரம்பை நவம்பர் 18, 2016 வரை விதித்திடவேண்டும்.
6. பணம் செலுத்தல் (பட்டுவாடா) மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2009 (Act 51 of 2007)-ன் சட்டப்பிரிவு எண் 10(2) மற்றும் பிரிவு எண் 18-ன் கீழ் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது.
இங்ஙனம்
(நந்தா S. தவே)
தலைமைப் பொதுமேலாளர்
|