அறிவிப்பு எண் 128
Ref. No. DCM (Plg) 1268/10.27.00/2016-17
நவம்பர் 12, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு - முகப்புகள் / ATM-கள் மூலம் பணம் வழங்கல்
₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதன் தொடர்பாக நவம்பர் 11, 2016 தேதியிட்ட DCM (Plg) 1264/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும் - அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு.
2. மேற்குறிப்பிட்டதன் தொடர்ச்சியாக, வங்கிகள் தினசரி தங்கள் முகப்புகள் மூலம்/ ATM-கள் மூலம் வழங்கும் பணம் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டன. அதன்படி, பின்னிணைப்பு-6A திருத்தியமைக்கப்பட்டது (இணைக்கப்பட்டுள்ளது). எங்களுக்கு அளிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைக்க வசதியாக விவரங்களை (பின்னிணைப்பு-6A-வுடனும்) எக்ஸெல் (Excel) வடிவில் நவம்பர் 13, 2016 முதல் அனுப்பும்படி வேண்டுகிறோம். தினசரி அறிக்கைகள் மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்
பின்னிணைப்பு-6A திருத்தியமைக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி மைய அலுவலகம், பணமேலாண்மைத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் தினசரி அனுப்பவேண்டிய அறிக்கையின் மாதிரி படிவம் – வங்கிகளால் தினசரி பெறப்பட்ட குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் (₹ 500 & ₹ 1000) மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து (முகப்புகளில் மற்றும் ATM-களில்) எடுக்கப்பட்ட ரொக்கப் பணத்தின் விவரம்
வங்கியின் பெயர் -
பணப்பரிவர்த்தனை நடைபெற்ற தேதி -
குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள்
பெறப்பட்ட /வழங்கப்பட்ட நோட்டுகள்
விவரங்கள் -
விபரங்கள் |
ரூ. 500
எண்ணிக்கையில் |
ரூ. 1000 எண்ணிக்கையில் |
ரூபாயில் மொத்த மதிப்பு |
குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் பணமாக |
|
|
|
குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் டெபாசிட் |
|
|
|
மொத்தம் |
|
|
|
கண்டறியப்பட்ட கள்ளநோட்டுகள் |
|
|
|
முகப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்த தொகை (குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் அல்லாதவை) |
|
ATM மற்றும் மற்ற எந்திரங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்த தொகை |
|
|