RBI/2016-17/79
FIDD.CO.Plan.CO.BC.No.17/04.09.001/2016-17
அக்டோபர் 06, 2016
தலைவர் / தலைமை செயல் அதிகாரி /
நிர்வாக இயக்குநர்
(அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
பிராந்திய கிராம வங்கிகள் நீங்களாக)
அன்புடையீர்
முன்னுரிமைப் பிரிவு கடன் வழங்கல் – திருத்தப்பட்ட அறிக்கை அனுப்புமுறை
சுற்றறிக்கை FIDD. CO. Plan BC. 54/04.09.01/2014-15, ஏப்ரல் 23, 2015 தேதியிட்டதன்படி, முன்னுரிமை பிரிவிற்கான வழிகாட்டு நெறிகள் திருத்தியமைக்கப்பட்டது. எனவே, காலாண்டு மற்றும் ஆண்டு கண்காணிப்புப் படிவங்கள் முன்னுரிமைத் துறை கடன் பற்றித் தெரிவிக்க ஜுன் 11, 2015 அன்று சுற்றறிக்கை FIDD. CO. Plan BC. No. 58/04.09.001/ 2014-15 வெளியிடப்பட்டது.
2. ஒரு மறு ஆய்வில், முன்னுரிமைப் பிரிவு கடனுக்குக் காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கை அளிக்கும் படிவங்களைத் திருத்தியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிகள், முன்னுரிமைப் பிரிவு கடன்களுக்கு இணைக்கப்பட்டுள்ள மாற்றியமைக்கப்பட்ட படிவங்களில் புள்ளி விவரங்களை அளித்திடுமாறு வேண்டுகிறோம். திருத்தியமைக்கப்பட்ட காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கைளை இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, புள்ளியியல் பிரிவு, மைய அலுவலகம், 3-வது தளம், அமர் பில்டிங், கோட்டை, மும்பை 400 001-க்கு 15 நாட்களில் மற்றும் ஒரு மாதத்தில் அதனதற்கேற்ப, ஒவ்வொரு காலாண்டு மற்றும் நிதியாண்டில் அளிக்கவேண்டும்.
3. வங்கிகளுக்கு மேலும் அறிவுறுத்துவது என்னவென்றால் ஜுன் 2016-ல் முடியும் காலாண்டு மற்றும் செப்டெம்பர் 2016, அக்டோபர் 21, 2016-லும் அறிக்கைகளைத் திருத்தியமைக்கப்பட்ட படிவங்களில் அனுப்பவேண்டும்.
இங்ஙனம்
(உட்கட்டா)
தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே உள்ளதுபோல |