RBI/2016-17/6 DGBA.GAD.13/15.02.005/2016-17
ஜூலை 7, 2016
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி கிஷான் விகாஸ் பத்திரம் 2014 சுகன்யா சம்ருதி கணக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 2004 ஆகியவற்றைக் கையாளும் முகமை வங்கிகள் /நிறுவனங்கள்
அன்புடையீர்
சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தில் திருத்தம்
எங்களது ஏப்ரல் 07, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DGBA.GAD.3175/15.02.005/ 2015-16-ஐ மேலே குறிப்பிட்ட பொருள் குறித்து பார்க்கவும். ஜுன் 20, 2016 தேதியிட்ட இந்திய அரசு தனது அலுவலக குறிப்பாணை (OM) F.No.1/04/2016–NS.II - ன்படி சிறுசேமிப்புத் திட்டத்திற்கான நிதியாண்டு 2016-17-ல் இரண்டாவது காலாண்டுக்குரிய வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
2. இந்த சுற்றறிக்கையின் உள்ளடக்கத்தை, தேவையான நடவடிக்கைகளுக்காக அரசு சிறுசேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் உங்களது வங்கிக் கிளையின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. உங்கள் வங்கிக் கிளையின் தகவல் பலகையில் இந்த திட்டப் பயனாளிகளின் கவனத்திற்காக விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
இங்ஙனம்
(V.S. பிரஜிஷ்) உதவிப் பொதுமேலாளர்
இணைப்பு – மேலே உள்ளதுபோல
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்