RBI/2015-16/443
DCM (Plg.) No.G-12/4297/10.27.00/2015-16
ஜுன் 30, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
தொடக்க (நகர) கூட்டுறவு வங்கிகள் / மண்டல கிராமப்புற வங்கிகள் /
அரசு கூட்டுறவு வங்கிகள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அம்மையீர் / ஐயா
2005 வரிசைக்கு முற்பட்ட வங்கி நோட்டுகள் – மாற்றும் வசதியில் திருத்தம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பான எங்களது சுற்றறிக்கை DCM (Plg) No. G-8/2331/ 10.27.00/2015-16 தேதி டிசம்பர் 23, 2015, DCM (Plg) No. G-9/2856/10.27.00/2015-16 தேதி பிப்ரவரி 11, 2016 மற்றும் டிசம்பர் 23, 2015 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டையும் பார்க்கவும்.
2. ஜனவரி 2014 முதல் தீவிர முயற்சியால், 2005 வரிசைக்கு முற்பட்ட வங்கி நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்பட்டது தெரிந்ததே. பெருமளவில் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. எனினும், சிறு அளவில் அந்த நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. எனவே, மறு ஆய்வு செய்தபின், ஜூலை 01, 2016 முதல், 2005 வரிசைக்கு முற்பட்ட வங்கி நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் மட்டுமே மாற்றித்தரப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேசுவர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி. இந்த வழிமுறைகள் ஜுன் 30, 2016-ல் பத்திரிக்கை விளம்பரத்தில் வெளியிடப்பட்டன.
3. 2005 வரிசைக்கு முற்பட்ட வங்கி நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.
4. இத்தகைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக உங்கள் வங்கிகளை அணுகும் பொதுமக்களை தாங்கள் தக்கவாறு வழிகாட்டும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
5. இந்த நோட்டுகள் ATM மூலமாகவோ அல்லது வங்கி முகப்புகள் மூலமாகவோ மீண்டும் புழக்கத்தில் செல்லாதபடி உறுதி செய்யவும்.
6. இதனைப் பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர் |