RBI/2015-16/442
FIDD No.FSD.BC.28/05.10.007/2015-16
ஜுன் 30, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
[அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(மண்டல கிராமப்புற வங்கிகள் உட்பட)]
அம்மையீர் / ஐயா
பயிர் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தணிக்கை
பயிர்களுக்கு இழப்பு ஏற்பட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் காலத்தே, தேவையான உதவிகளை அளிக்கும் வகையில் அமைந்துள்ளனவா என்பது குறித்து, மத்திய கணக்குத் தணிக்கையாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஒரு தணிக்கைய நடத்த உள்ளார். இந்த ஆய்வு ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப்பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதன்மைப் பொதுகணக்கு / பொதுக்கணக்கு (தணிக்கை) அலுவலகங்களின் உதவியோடு நடைபெற உள்ளது.
2. விவசாயக் கூட்டுறவு மற்றும் விவசாயிகளின் நலன் துறை, விவசாயக் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட், மாநில விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறை இவற்றின் பதிவேடுகளை ஆய்வு செய்தல் இந்த தணிக்கையில் அடங்கும்.. மேலும், பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் பல வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுவதால், இந்த வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களின் ஏடுகளை ஆராய்ந்து, பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகின்றனவா / மேலும் குறிப்பிட்ட பயனாளிக்கு நன்மை தருகின்றனவா என உறுதிப்படுத்தப்படுவது அவசியமாகும்.
மேலே குறிப்பிட்டபடி பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த உங்கள் பதிவேடுகளை, அந்தந்த மாநிலம் சார்ந்த முதன்மைப் பொதுக் கணக்கு அதிகாரி அலுவலகம் / கணக்கு அதிகாரி பொது (ஆடிட்) ஆகியோரால் நியமிக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு செய்ய வசதி செய்து தருமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
இங்ஙனம்
(உமா சங்கர்)
தலைமைப் பொதுமேலாளர் |