RBI/2015-16/416
FIDD.FSD.BC.No.25/05.10.001/2015-16
ஜுன் 02, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
[அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)]
அம்மையீர் / ஐயா
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் வங்கிகளின் நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்கள் மீதான – இந்திய யூனியன் மற்றும் பலருக்கு எதிரான சுவராஜ் அபியானின் ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு ஆணையை செயல்படுத்துதல்
மேலே குறிப்பிட்ட ரிட் மனு விசாரணைக்கு வந்தபோது, மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட், அந்தக் கொள்கைகள் நாட்டின் மக்களுக்குப் பயன்படுத்த ஏற்பட்டவை, ஏதோ அந்நியர்களின் நலனுக்காக அல்ல, எனவே, அவை மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தப்படவேண்டும் என்று இந்திய யூனியனுக்கும், மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கும் உத்தரவிட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, எல்லா பட்டியலிடப்பட்ட வங்கிகளும் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை, தொகுப்புச் சுற்றறிக்கை ஜூலை 01, 2015-ல் கண்டுள்ளபடி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்-படுகிறீர்கள்.
3. தயவுசெய்து இதைப்பெற்றதற்கான ஒப்புதல் அளிக்கவும்.
இங்ஙனம்
(உமா சங்கர்)
தலைமைப் பொதுமேலாளர்
|