RBI/2015-2016-17/413
DPSS.CO.PD.No.2895/02.10.002/2015-2016
மே 26, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் /
தலைமை செயல் அதிகாரிகள் /
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வங்கிகள் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட ) /
நகர கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /
அங்கீகரிக்கப்பட்ட தானியங்கி பணம் வழங்கும் இயந்திர
இணையதள இணைப்புகளை இயக்குவோர் /
அட்டைக்கு பணம் வழங்குவோர் இணையதள இணைப்புகளை இயக்குவோர்/
வெள்ளைச்சீட்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் இயக்குவோர்
அன்புடையீர்
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் – அட்டையை
வைத்து (CP) செய்யப்படும் பரிவர்த்தனைகளில், இடர்
குறைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
காந்த பட்டை அட்டைகளுக்குப் பதிலாக இஎம்வி சிப் (EMV Chip) மற்றும் பின் (PIN) அடிப்படையிலான அட்டைகள் வழங்கவேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தும் எங்களது
மே 07, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை RBI/2014-15/589 DPSS (CO) PD No. 2112/ 02.14.003/2014-2015 மற்றும் ஆகஸ்டு 27, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை RBI/2015-16/163 DPSS CO PD No. 448/02.14.003/2015-16-ஐயும் பார்க்கவும்.
2. நாட்டிலுள்ள விற்பனை முனையக் கட்டமைப்பு, இஎம்வி சிப் (EMV Chip) மற்றும் பின் (PIN) அட்டைகளை ஏற்று பரிசீலிக்கும் விதத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தானியங்கி கட்டமைப்பு காந்த அட்டை பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறது. இதனால் இஎம்வி சிப் (EMV Chip) மற்றும் பின் (PIN) அட்டை அடிப்படையில் செயல்பட்டாலும், பரிவர்த்தனைகளின்போது, தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளுதல், பிரதி எடுத்தல் மற்றும் மோசடிகள் போன்றவைகளுக்கு உட்பட நேரிடுகிறது. இஎம்வி சிப் (EMV Chip) மற்றும் பின் (PIN) அட்டை ஏற்பது கட்டாயமாக்குவது அவசியமாகிறது. இது பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் வங்கிகளை தானியங்கு பணம் வழங்கும் இயந்திர பரிவர்த்தனைகளின் “இஎம்வி பொறுப்பு மாற்றத்திற்கு” தயார் செய்கிறது.
3. 2017-ஆம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள், இந்தியாவில் உள்ள வங்கிகளும் மற்றும் வெள்ளை லேபிள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் இயக்குபவர்களும் தங்களிடமிருக்கும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் இ.எம்.வி சிப் மற்றும் பின் அட்டைகள் ஆகியவற்றைப் பரீசீலிப்பதற்கான வசதிகளை நிறுவிடவேண்டும். புதிதாக நிறுவப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், அதனைத் தொடங்கும்போதே இஎம்வி சிப் மற்றும் பின் அட்டைகள் பரிசீலிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். தங்களது ஏ.டி.எம் (ATM) பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு, மாற்றிக்கொள்ளுதல் ஆகியவைகளை செய்துகொள்ளுவதற்காக, தங்களது குழுமத்தின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஏ.டி.எம். / அட்டை நெட்வொர்க் அளிப்பவருடன் இணைந்துகொள்ளலாம்.
4. மேலும், அட்டைகளுக்குப் பணம் செலுத்தும் முறைமையில் சீரான தன்மையை ஏற்படுத்திட, மேலே சொல்லப்பட்டுள்ள அத்தியாவசியங்களை, அட்டை அடிப்படையில் பணம் அளிப்பதைக் கையாளும் தங்களது குறு ஏ.டி.எம்.களிலும் அமல்படுத்திடலாம்.
5. இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஜுன் / செப்டெம்பர் / டிசம்பர் / மார்ச் என்ற மாதங்களில் அந்தந்த காலாண்டு முடிந்தபின்வரும் மாதத்தின் 15ம் தேதிக்குள் ஒரு காலாண்டு அறிக்கை தலைமைப் பொதுமைலாளர், இந்திய ரிசர்வ் வங்கி, கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைத் துறை (DPSS), மைய அலுவலகம், மும்பை என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
6. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007-ன் (2007-ன் சட்டம் 51) கீழ் பிரிவு 18 மற்றும் பிரிவு 10 (2) பிரிவின் கீழ் இந்த வழிகாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இங்ஙனம்
(நந்தா S. தவே)
தலைமைப் பொதுமேலாளர் |