Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (158.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 26/05/2016
Credit information reporting in respect of Self Help Group (SHG) members

RBI/2015-16/409
DCBR.BPD (PCB) Cir.No.17/16.74.000/2015-16

மே 26, 2016

தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள்
மாநில / மத்திய கூட்டுறவு வங்கிகள்

அம்மையீர் / ஐயா

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொடர்பாககடன் தகவல் அறிக்கை அளித்தல் –

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், மாநில, மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த சுற்றறிக்கையின் தேதியிலிருந்து ஆறுமாதத்திற்குள் அனுப்பவேண்டும். இவை குறித்த விவரங்களுக்கு UBD.CO.BPD.PCB.Cir.No.4/16.74.000/2014-15 மற்றும் RPCD.RRB.RCB.BC.No.13/03.05.33/2014-15, ஜூலை 15, 2014 ஆகியவற்றில் இணைப்பு II/III ல் பத்தி 5 ஐப் பார்க்கவும்.

2. மேற்கூறிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வு, வங்கிகள் இத்துறையில் தேவையான அளவு முன்னேற்றம் ஏற்படாததை எடுத்துக் காட்டியுள்ளது. இதைத் தவிரவும் நடைமுறைப்ப்படுத்துவதில் அதிகப்படியான சவால்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.. மேலும் அதன் நோக்கத்தில் தெளிவு பெற, வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்ப்படுத்துவதில் உள்ள சவால்களைக் கண்டறியவும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் ரிசர்வ் வங்கி, தற்போது ஒரு செயற்குழுவை நியமித்துள்ளது. இக் குழுவில் ரிசர்வ் வங்கி, நபார்டு, வங்கிகள், கடன் தகவல் கம்பெனிகள் (Credit Information Companies – CICs) ஆகியவற்றின் அங்கத்தினர்கள் இடம்பெறுவர்.

3 நிதிச் சேர்க்கைக்காகவும், வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் முடிவெடுக்கவும், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் தொகுப்பின் தரம் அறியவும், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் தகவல் அறிக்கை அளிப்பது இன்றியமையாததாகும் .இதைக் கருத்தில் கொண்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் தகவல் அறிக்கை அளிப்பதற்காக வங்கிகள் ஒரு சீரான முறைமையை விரைவில் ஏற்படுத்துவது அவசியம் என்று செயற்குழு வலியுறுத்துகிறது. இதன்பொருட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் தேவைகளைப் படிப்படியாகப் பூர்த்திசெய்ய செயற்குழு பரிந்துரைக்கிறது. தகவல்கள் சரியாகவும் சமரசம் செய்யத் தேவை இன்றியும் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய குழு இருபடிநிலைகளை முன்மொழிகிறது.

II. கடன் விபரங்களைச் சேகரித்தல், அறிக்கை தாக்கல் செய்தல்

4. சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் விபரங்களை வங்கிகள் CIC-க்கு அளிக்கவேண்டிய முறைகள் கீழே உள்ளன.

1. ரூ. 30,000/-க்கும் அதிகமாக உள்ள சுய உதவிக்குழு உறுப்பினரின் கடன், கடனைச் சார்ந்த திட்டங்கள் குறித்து வங்கிகள் சேகரிக்கவேண்டிய விவரம் அட்டவணை - 1
2. ரூ. 30,000/- வரை உள்ள சுய உதவிக்குழு உறுப்பினரின் கடன், கடனைச் சார்ந்த திட்டங்கள் குறித்து வங்கிகள் சேகரிக்கவேண்டிய விவரம் அட்டவணை – 2
3. சுய உதவிக்குழு உறுப்பினர்களைப் பற்றி தனித்தனியாக வங்கிகள் CICs-க்கு அனுப்பவேண்டிய விவரங்கள் அட்டவணை – 3
4. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்போது அவர்களைப் வங்கிகளால் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அட்டவணை - 4

5. புள்ளி விவரங்கள் அட்டவணையின் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்டபடி வங்கிகள் சுய உதவிக்குழுவின் உறுப்பினர்களின் தகவலை அட்டவணை 1 மற்றும் 2-ன்படி சேகரித்து 3-ல் குறுப்பிட்டபடி CICs-க்கு அனுப்பவேண்டும். அட்டவணைகள் கீழே குறிப்பிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன..

(i) சில தகவல்கள் (எண் 17 அட்டவணை 1 மற்றும் 2), ஏற்கனவே தொடர்புடைய சுய உதவிக்குழு, சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கொண்ட தொடர்பை உணர்த்தும். இது வங்கிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் முடிவை எடுக்க உதவும். இந்த விவரங்கள் ஏற்கனவே சுய உதவிக்குழு CICs-க்கு அளித்த விவரங்களை அடிப்படையாகக்கொண்டது. எனவே, இவற்றை வங்கிகள் அட்டவணை 3-ல் குறிப்பிடவேண்டாம்.

(ii) இந்த தகவல்கள் இரண்டு படிநிலைகளில் (Phase) நடைமுறைப்படுத்தப்படும். முதல் படிநிலை ஜூலை 01, 2016-ல் தொடங்கி ஒரு வருடத்திற்கு இருக்கும். இரண்டாவது படிநிலையில் கடன் விவரங்கள் ஆழமாகச் சேகரிக்கப்பட்டிருக்கும். கூடுதல் / திருத்தங்கள் இரண்டாவது படிநிலையின் கடைசியில் அட்டவணை 1 மற்றும் 2-ல் காட்டப்படும்.

(iii) சுய உதவிக்குழு ரூ.1,00,000/-ஐத் தாண்டிய கடனை வாங்கியிருந்தால் அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் குறித்த கடன் விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு அறிக்கையில் அளிக்கப்படும்.. எனினும், குழுவின் கடன் தொகையைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் அல்லாத தகவல்களையும், கடன் வாங்குவதற்காக வங்கியை அணுகும்போது சுய உதவிக்குழு மூலம் அறிவிக்கவேண்டும்.

(iv) மேலே குறுப்பிட்ட (iii)-ன்படி சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் ரூ.30,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், குழுவின் கடன் ரூ.30,000 வரை இருப்பவர்களைவிட அதிகமான விவரம் அளிக்கவேண்டும். இந்த வித்தியாசமானது முழுதும் தவிர்க்கப்படாது, குறைக்கப்படலாம். ஏனெனில், மேலே குறிப்படப்பட்டுள்ள பிரிவிற்கு இரண்டாம் படிநிலையில் நிறைய விவரங்கள் சேர்க்கப்படுகின்றன.

(v) சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உபபிரிவுகளின் சமுதாய பொருளாதார நிலைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, அந்தந்த பிரிவுகளுக்குக் கடன் அளிப்புகளை மதிப்பீடு செய்யும் நோக்கத்திற்காகவும், அந்தந்த பிரிவுகளுக்குக் கடன் அளிப்பு பாய்ந்திடும் உத்திகளை வடிவமைக்கவும், வங்கிகள், நெறிமுறையாளர்கள் மற்றும் அரசு வளர்ச்சி முகமைகளுக்குத் தேவைப்படும் கூடுதல் தகவல்களை அளிக்கவும், தனித்தனியாக கடனாளிகளை அடையாளப்படுத்திடவும், கடன் அல்லாத தகவல்கள் தேவைப்படுகின்றன. அவை இதன்பொருட்டே வடிவமைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நபரை ஒரு குறிப்பிட்ட சுயஉதவிக்குழுவுடன் இணைந்தவராகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சுய உதவிக்குழுவின் அனைத்து நபர்களையும் அல்லது அவருடன் தொடர்புடை.ய அனைத்து சுய உதவிக் குழுக்களையும் அடையாளம் காணவோ உதவிடும் வகையில் கடன் அல்லாத தகவல்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்டு, CIC-களுக்கு அனுப்பப்படுகின்றன

6. வங்கிகள் தங்களது system software-ல் தேவையான சுய உதவிக் குழுவினரின் விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் மாற்றங்களைச் செய்யவேண்டும். இதனால் வங்கிகள் விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கலாம். CICக்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய நாள் ஜூலை 01, 2016 (Phase-I) மற்றும் ஜூலை 01, 2017 (Phase-II).

7. வங்கிகள் தாங்களாகவோ, பிறரை பணியில் அமர்த்தியோ சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் விவரங்களைச் சேகரித்துக்கொள்ளலாம். ஆனால், வங்கிகள் DBR.Circular No.BP.40/21.04.158/2006-07 நவம்பர் 03, 2006 தேதியில் திருத்தியமைக்கப்பட்டபடி, வெளியாளைப் பணியமர்த்துதல் தொடர்பாக உள்ள மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் எல்லா அறிவுரைகளையும் பின்பற்றவேண்டும். அவை அளிக்கும் தகவல்கள் சரியானவை என்பதற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து பணி அமர்த்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சரியான விவரங்களைக் கண்டறிய வேண்டும்.

8. வங்கிகள் சுய உதவிக்குழுவின் வாராக்கடன் நிலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறைவான தொகையான ரூ.20,000-க்கும் மேல் கடன் பெறுவோரின் விவரங்களையும், சுய உதவிக்குழுவின் மொத்த வாராக் கடன் அந்தப்பிரிவின் வாராக்கடனில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தாலோ அல்லது வங்கியின் மொத்த வாராக்கடனில் 5 சதவிகிதப் புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தாலோ தகவல்களை சேகரிக்கவேண்டும்.

9. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிடில், முன்னுரிமைப் பிரிவுக் கடன் இலக்குகளைப் பூர்த்தி செய்வதைக் கணக்கெடுப்பதில், சுய உதவிக்குழுக்களுக்கு அளித்த கடன் கணக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. கடன்/ கடன் அல்லாத தகவல்கள் அளிப்பதில், நகர கூட்டுறவு வங்கிகள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றனவா என்பது குறித்த சீராய்வு ஒவ்வொரு படிநிலை (Phase) இறுதியிலும் நடத்தப்படும். அதில் உள்ள நிலவரப்படியே, முன்னுரிமைக் கடன் இலக்கிற்கு சுய உதவிக்குழு கடன் கணக்குகள் சேர்க்கப்படுமா என்பது குறித்த முடிவும் எடுக்கப்படும்.

10. இதர செயல்முறை அறிவுறுத்தல்கள்

வங்கிகள் மற்றும் குறுநிதி நிறுவனங்களிலிருந்து சுய உதவிக்குழு உறுப்பினர் பெற்ற கடன் தகவல்களை மட்டுமே சேகரித்துவைக்க இந்தக் கட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, சுய உதவிக்குழு அங்கத்தினர்கள் தங்கள் சுய சேமிப்பிலிருந்து ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்ட கடனுதவிகள் குறித்த தகவல்கள் இதில் சேர்க்கப்படாது. ஆயினும், ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரின் ஒட்டுமொத்தக் கடன் நிலவரம் குறித்த தகவல் வேண்டுமானால், அதில் மேலே குறிப்பிட்ட வகையான தகவலும் தேவைப்படும். ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரின் கடன் தகவலின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சியின் ஒரு அம்சமாக இத்தகு உறுப்பினர்களுகிடையேயான கடன் தகவல்களையும் சேர்ப்பது குறித்த தீர்மானம் இரண்டாம் படிநிலை (Phase-II) ஸ்திரமான பின் எடுக்கப்படும்.

11. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைக் கருத்தில் கொண்டு, அவற்றின் மேற்பார்வையிலும் அறிக்கையிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கொண்டும் அவைகளின் கடன் திரும்பப் பெறுதல் குறித்த தகவல்கள் Phase-II வந்தவுடன் கருத்தில் கொள்ளப்படும்.

12. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கிட வங்கிகளை அணுகும்போது, அவற்றோடு கடன் கணக்குகள் இணைக்கப்படும் சாத்தியக் கூறுகள் இருக்குமாயின், KYC (Know Your Customer) விவரங்களைச் சேகரித்து, சிறு கணக்கு / அடிப்படை வங்கிச் சேமிப்புக் கணக்கு தொடங்கிட வங்கிகள் ஊக்குவிக்கவேண்டும். இதனால், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பற்றிய அடிப்படைக் கடன் தகவல் கிடைக்கப்பெறும். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இவ்வாறு சிறு கணக்குகள் தொடங்க ஒப்புக்கொள்வாராயின்,அட்டவணை 4 ல் குறிப்பிட்டபடி தகவல்கள் சேகரிக்கப்பட்டுப் பதிவில் வைக்கப்படும்.வருங்காலத்தில்அவர்கள் வங்கியிடம் கடன் கேட்கும்போது இத் தகவல் உபயோகப்படும்.ஆயினும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிக்க இதை ஒரு கட்டாய நிபந்தனையாக முன்வைக்கக்கூடாது.

13. வங்கிகள் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றிட அனைத்து முயற்சிகளையும் உண்மையாக மேற்கொண்ட போதிலும், சுய உதவிக்குழுவுக்கு கடன் வழங்கும்போது, இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட தகவல் சேகரித்தலை ஒரு கட்டாய நிபந்தனையாக முன் வைக்கக் கூடாது.

14. சுய உதவிக்குழுக்கள் தத்தம் உறுப்பினர்களிடையே உள்ள வங்கிக் கடன் பங்கீட்டு விவரங்களை எழுத்து வடிவில் கணக்கு வைத்துக்கொள்ள வங்கிகள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். நபார்டு வங்கியின் மின்னணுத் திட்டத்தின் மூலமும் சுய உதவிக்குழுக்கள் கடன் விவரங்களை பராமரிக்க அவர்களுக்கு ஊக்க சலுகைகளை அளிக்கமுன்வரலாம்.

15. CICs, கடன் கட்டத்தவறியவர்கள் என்று அறிவித்த பட்டியலில் இடம்பெற்ற சுய உதவிக்குழுக்கள் / உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களைக் கையாள வங்கிகள், உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும். கடன் கட்டத்தவறியவர் என்ற காரணத்தாலேயே சுய உதவிக்குழுக்கள்/உறுப்பினர்களின் கடன்விண்ணப்பம் மறுக்கப்படவேண்டாம். கடன் வரலாற்றுடன், உறுப்பினரின் பொருளாதார நிலையையும் மேற்கொள்ளவிருக்கும் தொழில்/வர்த்தக நடவடிக்கையின் லாபகரம் மற்றும் அவரின் கடன் திருப்பித்தரும் தகுதியையும் கருத்தில் கொண்டு, கடன் விண்ணப்பத்தை ஆய்வு செய்யவேண்டும்.

16. கடன் தகவல் கம்பெனி (CIC) Act 2005-ன்படியும் வங்கிகள் மற்றும் பரஸ்பர நிதிகளின் அறிக்கையின்படியும், ரிசர்வ் வங்கியின் அறிவறுத்தலாலும், சுய உதவிக்குழுக்களின்/ உறுப்பினர்களின் கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டு விவரம் வழங்கவேண்டும்.

IV. CICs-க்குக் குறிப்பான அறிவுறுத்தல்கள்

17. மேலே குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடைமுறைப்படுத்த CICs-க்கள் தங்கள் Systems மற்றும் செயல்முறைகளில் தேவையான மாற்றங்களை செய்யவேண்டும்.

18. கடன் திட்டக் கொள்கைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் உதவும் நோக்கில், CICs சுய உதவிக்குழுக்கள் அல்லது சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் தகவல்களை ஒட்டுமொத்த அளவில், அரசாங்க ஏஜென்டுகள், நபார்டு, வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஆகியவர்களுடன் பகிர்ந்தளிக்க CICs தங்கள் வாரியத்தின் ஒப்புதல் பெற்று, உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும். வாரியத்தின் ஒப்புதல் பெற்ற கொள்கைகளுடன் சுய உதவிக்குழுக்கள் பிரிவினருக்குப் பயன்படத் தக்க ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒட்டுமொத்த தகவல்களை வேறு முகமைகளுக்கும் அளிக்கலாம். ஒட்டுமொத்த தகவல் பகிர்வு என்பது ஒவ்வொரு சுய உதவிக்குழு மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறித்த தகவலை விருப்பு வெறுப்பற்ற முறையிலும், இரகசியமாகவும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ற வகையிலும் அமைந்திட வேண்டும்.

இங்ஙனம்

(சுமா வர்மா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்