RBI/2015-16/391
FIDD.No.FSD.BC.24/05.05.014/2015-16
மே 05, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
[அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அம்மையீர் / ஐயா
சிறப்பு விவசாயக் கடன் திட்டங்களுக்கான அறிக்கைகள்
(Special Agriculture Credit Plan-SACP) தாக்கல் செய்வது நிறுத்தப்படுகிறது.
விவசாயத்திற்குத் தேவையான கடன் வசதிகளை மேம்பாடு செய்வதற்காகச் சிறப்பு விவசாயக் கடன் திட்டங்கள் (SACP), 1994-ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, அது பின்னர் 2004-ல் தனியார் வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்- பட்டது. SACP-ன் கீழ் வங்கிகள் வருடாந்திர (ஏப்ரல்-மார்ச்) சுய இலக்கை, கடந்த ஆண்டு பட்டுவாடா செய்ததைவிட 25% அதிகமாக நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்ளப்-படுகின்றனர். வங்கிகள் இதை நடைமுறைப்படுத்துவதில், மார்ச் மற்றும் செப்டம்பர் கடைசியில் உள்ள நிலவரப்படி அரையாண்டு அறிக்கைகள் ரிசர்வ் வங்கிக்கு (FIDD) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
2. இந்த விவரங்கள் முன்னுரிமைப் பிரிவு அறிக்கையில் தாக்கல் செய்யப்படுவதால், மேற்குறிப்பிட்ட அறிக்கைகளைத் தாக்கல் செய்வது ஏப்ரல் 2016 முதல் நிறுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகள் 2016-17 ஆண்டுக்கு உரிய மேற்குறிப்பிட்ட அறிக்கைகளை ரிசர்வ் வங்கி (FIDD)-க்கு சமர்ப்பிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்-படுகிறார்கள். ஆனால், மார்ச் 2016- வரையிலான அரையாண்டு காலத்திற்கு கடன் வழங்கிய விவரங்கள் அறிக்கையை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பவேண்டும்.
3. தயவுசெய்து இதைப்பெற்றதற்கான ஒப்புதல் அளிக்கவும்.
இங்ஙனம்
(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர் |