RBI/2015-16/383
Ref.DBS.CO.PPD.BC.No.10/11.01.005/2015-16
ஏப்ரல் 28, 2016
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அம்மையீர் / ஐயா
ஜிலானி கமிட்டி பரிந்துரைகளைப் பின்பற்றுதல்
வங்கிகளின் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்த ஜிலானி கமிட்டியின் பரிந்துரைகளைக் குறிக்கும், ஜுன் 28, 2000 தேதியிட்ட சுற்றறிக்கை DBS. PPD. BC. No. 39/11.01.005/99-2000-ஐப் பார்க்கவும். மன்ற இயக்குநர்கள் சீராய்வுகள் நாட்காட்டி குறித்த தணிக்கைக்குழு தொடர்பான நவம்பர் 10, 2010 தேதியிட்ட சுற்றறிக்கை DBS. ARS. BC. No.4/08.91.020/2010-11-ஐயும் கவனிக்கவும். அதன்படி ஜிலானி கமிட்டியின் பரிந்துரைகளின் அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய அறிக்கை தணிக்கைக் குழுவின் (Audit Committee of the Board-ACB) முன் தாக்கல் செய்யப்படவேண்டும்.
2. பல வங்கிகள் இதனை நடைமுறைபடுத்துவதில், எந்த நிலையில் உள்ளன என்பதை ஆராய்ந்தபின், ஜிலானி கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று நடக்கும் நிலைப்பாடுகள், ஆடிட் கமிட்டியின் (ACB) முன் தாக்கல் செய்யப்படவேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் வங்கிகள் பின்வருவனவற்றை உறுதி செய்யவேண்டும்.–
-
இந்த பரிந்துரைகளை ஏற்றுநடத்தல் தொடர்ந்தும் முழுமையாகவும் இருக்க வேண்டும்.
-
இந்த பரிந்துரைகள் வங்கிகளின் உள் ஆய்வு / தணிக்கை செயல்முறைகளில்தக்கமுறையில் புகுத்தப்பட்டு. மேலும், அவற்றின் கையேடுகளிலும் / அறிவுறுத்தல்களிலும் ஆவணப்படுத்தப்படவேண்டும்.
இங்ஙனம்
(பார்வதி V. சுந்தரம்)
தலைமைப் பொதுமேலாளர் - பொறுப்பு |