RBI/2015-16/378
DBR.No.Leg.BC.93/09.07.005/2015-16
ஏப்ரல் 21, 2016
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வங்கிகள் /
மண்டல கிராமப்புற வங்கிகள் /
வட்டார வங்கிகள் உட்பட
ஐயா
சந்தேகத்திற்கு இடமளிக்கும் போலியான திட்டங்களில்
சேமிப்பு செய்வதற்கு எதிராக வங்கிக் கிளைகளில்
எச்சரிக்கை விளம்பரம்
சமீப காலங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் போலியான நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு, சேமிப்பு, முதலீடு, இன்ன பிற வழியாக நிறைய திட்டங்களை வெளியிட்டது நீங்கள் அறிந்ததே. பெரும்பாலான நேரங்களில் இத்தகைய முதலீடுகள், பண்ணை நிலங்கள் மற்றும் பிற துறையில் முதலீடு செய்யப்பட்டு, வங்கிகளைவிட அதிகமான வருமானத்தை அளிப்பதாக கூறப்பட்டன. இத்தகைய திட்டங்கள் பொதுமக்களை அதிக வருமானம் தருவதாகக் கூறி ஏமாற்றுபவையாக உள்ளன.
2. வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் லாட்டரி மற்றும் பரிசுகள் பெற்றதாக தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட தொகையை ஒரு தெரியாத கணக்கில் செலுத்தினால் அவர்களது லாட்டரிப் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுவது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இத்தகையான பொய்யான செய்தியை நம்பி, கேட்கப்பட்ட பணத்தைச் செலுத்தி, தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் மோசடியாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
3. போதுமான நிதிக் கல்வி இல்லாததும், மோசடித் திட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிலை இல்லாததுமே அப்பாவி சேமிப்பாளர்கள் இத்தகைய திட்டங்களுக்குப் பலியானதற்குக் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நிகழ்வுகள் பொதுமக்களைப் பாதிப்பதுடன், வங்கித் துறையிலும் விளைவுகளை ஏற்படுத்தியு ள்ளன. ஏனெனில், இத்தகைய போலியான நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்ட இந்தப் பணம் வங்கித் துறைக்கு வந்து சேகரமாகி சேமிப்பைப் பலப்படுத்தியிருக்கும்.
4. பொது மக்களிடையே பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை நிதிக்கல்வி மூலமும் விழிப்புணர்வு மூலமும் ஏற்படுத்தி, போலித்திட்டங்களை அறிவுறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சிக்குப் பரவியுள்ள வணிக வங்கிக் கிளைகள் கூடுதல் ஒத்துழைப்புத்தரும் என்று நம்புகிறோம்.
5. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு வங்கிகள் பொதுமக்களின் ஆர்வத்தை வாடிக்கையாளர் கல்வியில் தூண்டும் முயற்சியாக சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும், அறிவிப்புகளையும் வடிவமைத்து கீழ்க்கண்ட செய்திகளை வெளியிடுவதை மேற்கொள்ளலாம்.
-
பணம் உங்களுக்கு வரவிருப்பதாக முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல் / தொலைபேசி / மற்ற செய்திகளுக்குப் பதில் அனுப்பவேண்டாம்.
-
உண்மையிலேயே யாரும் உங்களுக்கு இலவசமாகப் பணம் தரமாட்டார்கள்.
-
அதிக வருமானம் அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டங்களில் முதலீடு செய்யும்போது கவனமாக இருக்கவும்.
-
நெறிமுறைக்கு
-
உட்படாத கம்பெனிகள் / நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
-
காதால் கேட்பதை நம்பவேண்டாம். நீங்களாக எதையும் சரிபார்க்கவும்.
-
அதிக வட்டி, அதிக ஆபத்தையும் அசலையும் கூட இழக்கச் செய்யும் ஆபத்தையும் கொண்டது. உங்கள் ஆபத்துக்களை, எதிர்பார்ப்பை சரி பார்க்கவும்.
-
உங்கள் பணத்தைக் கவனமாகப் பாதுகாக்கவும் – சம்பாதிப்பது கடினம். இழப்பது சுலபம்.
-
சந்தேகம் ஏற்பட்டால் நம்பகமான நிதி ஆலோசகரை அணுகவும்.
-
விவரங்களுக்கு www.rbi.org.in அல்லது www.sebi.gov.in அல்லது www.irda.gov.in -ஐ அணுகவும்.
|
வாடிக்கையாளரின் எளிதான கவனத்திற்காக (அந்தந்த மாநில ஆட்சி மொழியில்) மேற்கூறிய செய்திகளை முடிந்த இடங்களில் எல்லாம் காண்பிக்கவும் அல்லது பகிர்ந்தளிக்கவும். வங்கிக் கிளைகள், பொதுமக்கள் அடிக்கடி அணுகும் இடங்களாக இருப்பதால் அவை தகவல்களைப் பரப்புவதற்கு உதவும். வங்கிகள் ATM (தானியங்கி பணம் வழங்கல் இயந்திரம்)களையோ அல்லது பிசினஸ் கரஸ்பாண்டன்ட் இடங்களையோ தகவல்களை அதிகப்பரவலாக்க தேர்ந்தடுக்கலாம்.. இது வங்கிக்கும் உதவும். ஏனெனில் அதன் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வோடு மோசடித் திட்டங்களுக்கும் அழைப்புகளுக்கும் எதிராகச் செயல்பட முடியும்.
6. இத்தகைய திட்டங்கள் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயனளிக்க களப்பணியாளர்கள் அறுவுறுத்தப்படவேண்டும். கருத்துள்ள தகவல்களைப் பரிமாரிக் கொள்ளவும், சந்தேகத்திற்கிடமான (சந்தைத்தகவல் அறிவினால்) திட்டங்களை மண்டல அலுவலக நிலையில் தெரிந்துகொள்ளவும், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தோடு இத்தகைய தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், வங்கி அலுவலர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
7. மேற்கூறிய செய்திகளின் பொதுவான வடிவத்தை அமைப்பதற்காக இந்திய வங்கிகளின் சங்கத்திற்கு இந்தச் சுற்ற்றிக்கையின் நகலை அனுப்புகிறோம். ஒவ்வொரு வங்கியும் இதனை மேற்கொண்டு அச்சிட்டு, பகிர்ந்தளித்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கலாம்.
இங்ஙனம்
(ராஜிந்தர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர் |