RBI/2015-16/366
FIDD No.FSD.BC.23/04.09.001/2015-16
ஏப்ரல் 07, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமைநிர்வாகஅதிகாரி
[அனைத்துப்பட்டியலிடப்பட்டவணிகவங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக் கூட்டுறவு வங்கிகள் /
வட்டார வங்கிகள் உட்பட)]
அம்மையீர் / ஐயா
முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் சான்றிதழ்
முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கல் – இலக்கு, விவரங்கள், முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் சான்றிதழகள் குறித்த அறிமுகம் ஆகியவை குறித்த Para. VIII of Circular FIDD. CO. Plan. BC 54/04.09.01/2014-15, தேதி ஏப்ரல் 23, 2015-ஐப் பார்க்கவும்.
2. இந்திய அரசாங்கம் அவர்களது அறிவிப்பு தேதி பிப்ரவரி 04, 2016-ன்படி, வங்கியியல் ஒழங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 6(1)(0) கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, முன்னுரிமைப் பிரிவுக் கடன் சான்றிதழ்களில் (PSLC) பரிவர்த்தனைகள் மேற்கொள்வது ஒரு வியாபாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி PSLC-யில் வணிகம் செய்வதற்கான வழிமுறைகள் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.. PSLCs-ல் வணிகம் செய்வதற்காக CBS portal (e-Kuber)-ல் ஒரு ப்ளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது. உபயோகிப்பாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் / விவரங்கள் போர்டலில் உள்ள அந்த ப்ளாட்பார்மில் விவரமாக உள்ளன.
இங்ஙனம்
(A. உத்கடா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு
முன்னுரிமைப் பிரிவுகளுக்குக் கடன் வழங்கும் சான்றிதழ்கள் – திட்டம்
i. நோக்கம் – வங்கிகள் முன்னுரிமைப் பிரிவுகளுக்குக் கடன் வழங்கல் இலக்கையும் துணை இலக்கையும் அடைவதில் தங்களுடைய பற்றாக்குறையை சரி செய்வதற்காகவும், உபரியாக உள்ள பணத்தை முதலீடு செய்வதற்காகவும், அதன் மூலம் முன்னுரிமைப் பிரிவுகளுக்குக் கடன் வழங்கலை அதிகப்படுத்துவதற்காகவும், பயன்படுத்தலாம்.
ii. உபகரணங்களின் தன்மைகள் – விற்பனையாளர் முன்னுரிமைப் பிரிவில் இலக்கை ஈடுகட்ட அந்தக்கடன் பொறுப்பை வாங்குகிறார். அதிகமாக அதை வைத்திருப்பவர் விற்கிறார். அந்தக் கடன் சொத்துக்குரிய இடர்வரவு. மாற்றம் செய்யப்படுவதில்லை. கடன் சொத்துகளை மாற்றம் செய்வதும் இல்லை.
iii. நடைமுறை – PSLCs ரிசர்வ் வங்கியின் CBS portal (e-Kuber) மூலம் வர்த்தகம் செய்யப்படும். E-Kuber portal-லில் அதற்காக செயல்பாட்டு விதிமுறைகள், வர்த்தகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
iv. விற்பவர் / வாங்குவோர் – அவ்வப்போது ரிசர்வ் வங்கி அளிக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப PSL தகுதியுடைய கடன்களை வழங்கக் கூடிய பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர்ப்பகுதி வங்கிகள், சிறிய நிதி வங்கிகள் (செயல்பாட்டுக்கு வரும்போது), ஆகியவை..
v. PSLCs-ன் வகைகள் – இவை நான்கு வகைப்படும்.
-
PSLC விவசாயம் – விவசாயக் கடன் இலக்கை அடையும் நோக்கை கணக்கில் கொள்ளப்படுகின்றன.
-
PSLC / சிறு / குறு - சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உட்பிரிவு இலக்கை அடையும் நோக்கில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
-
PSLC குறு தொழில்கள் – குறு தொழிலுக்கு இலக்கு கணக்கில் கொள்ளப்படுகின்றன.
-
PSLC பொது – முன்னுரிமைப் பிரிவுகளுக்கு பொதுவான இலக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது.
தொகுப்பு சுற்றறிக்கை FIDD. CO. Plan. BC 4/04.09.01/2015-16, முன்னுரிமைப் பிரிவுகளுக்குக் கடன் வழங்கல் – இலக்கு மற்றும் வகைகள், தேதி ஜூலை 01, 2015-இல் குறுப்பிட்டபடி முன்னுரிமைப் பிரிவில். விவசாயம், குறு தொழில் போன்ற பல்வேறுவகைகள் உள்ளன. மேலும் வங்கிகள் மொத்த இலக்கை அடைவதோடு, சிறு,குறு விவசாயிகளுக்கான கடன்களில் உப இலக்குகளையும் எட்டவேண்டும்.. அதன்படி குறிப்பிட்ட PSL இலக்கில் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகவே மேலே குறிப்பிடப்பட்ட நான்கு வகைச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கடன் இலக்கையும், உட்பிரிவு இலக்கையும் அடையும் வகையில் அவற்றிற்கான விளக்கம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது..
வ. எண் |
PSLC-ன் வகைகள் |
குறிப்பது |
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது |
1. |
PSLC - விவசாயம் |
தனியான சான்றிதழ் உள்ள சிறு குறு விவசாயிகளின் கடன் தவிர எல்லா விவசாயக் கடன்களும். |
மொத்த PSL இலக்கில் விவசாயக் கடனுக்கான இலக்கை அடைவது. |
|
PSLC – சிறு/குறு விவசாயம் |
சிறுகுறு விவசாயிகளுக்குத் தகுதியான எல்லாக் கடன்களும். |
மொத்த PSL இலக்கில் சிறு/ குறு விவசாயிகள், உப இலக்கு மற்றும் ஒட்டுமொத்த இலக்கை அடைவது. |
|
PSLC - குறு நிறுவனங்கள் |
குறு நிறுவனங்களுக்கான எல்லாக் கடன்களும். |
மொத்த PSL இலக்கில் குறு நிறுவனங்களுக்கான உப இலக்கை அடைவது. |
|
PSLC - பொது |
மீதமுள்ள முன்னுரிமைப் பிரிவுகளுக்கான கடன்கள். அதாவது, தனியான சான்றிதழ் உள்ள விவசாயம் மற்றும் குறு தொழில்களுக்கான கடனைத் தவிர. |
PSL ஒட்டுமொத்த இலக்கை அடைவது |
இவ்வாறு உட்பிரிவுகளில் (உதாரணம் – சிறு / குறு விவசாயிகள் கடன்) பற்றாக்குறை இருப்பின் அவர்கள் ஒரு குறிப்பட்ட PSLC இலக்கை அடைவதற்காக வாங்க வேண்டும். ஆனால், ஒரு வங்கி மொத்த இலக்கில் பற்றாக் குறை வைத்திருந்தால் அது புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு PSLC-ஐ வாங்கலாம்.
vi. PSL நிறைவேற்றத்தைக் கணக்கிடுவது – ஒரு வங்கியின் PSL சாதனை நிலுவையில் உள்ள மொத்த முன்னுரிமைப் பிரிவு கடன்களைக் கொண்டும், நிகர PSLCs வெளியிட்டது, வாங்கியதைக் கொண்டும் கணக்கிடப்படும். உப இலக்கு தனியாகக் குறிப்பிடப்படும்போது, இவை அறிக்கை அளிக்கப்படும் தேதியில் தனியாகக் கணக்கிடப்படும்.
vii. வெளியீட்டுக்குத் தகுதியான தொகை – பொதுவாக PSLC குறிப்பிட்ட சொத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படும். எனினும் பலமான நடமாட்டமுள்ள PSLC சந்தைக்காக ஒரு வங்கி முந்தைய வருடத்தின் 50 சதவீதம் PSLCஐ புத்தகத்தில் அதற்கான அடிப்படைஇல்லாமல் வெளியிடலாம். வங்கி, முன்னுரிமைப்பிரிவுக்கான இலக்கில் நிலுவையில் இருக்கும் கடன், வெளியிடப் பட்ட/வாங்கப்பட்ட PSLC இன் நிகரத்தொகை இரண்டின் கூட்டுத்தொகை கவனத்தில் கொண்டால் அறிக்கை தரும் நாளில் வங்கி முன்னுரிமைப் பிரிவுக்கடன் இலக்கை அடைந்திருக்கவேண்டும். இதுவரை இருந்தது போலவே இலக்கை அடைவதில் உள்ள பற்றாக்குறையை RIDF / மற்ற நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் வங்கிகள் சரி செய்யலாம்.
viii. கடன் இடர்வரவு -- சொத்துக்கள் மாற்றம் செய்யப்படாததாலும்,பணப் போக்குவரத்து இல்லாததாலும், சொத்து மீதான, கடன் இடர்வரவு மாற்றப்படாது.
ix. முடிவு தேதி – எல்லா PSLC-யும் மார்ச் 31 அன்று காலாவதி ஆகும். அது எந்த தேதியில் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் மார்ச் 31-க்குப் பிறகு செல்லுபடி ஆகாது.
x. தீர்வு – பணம் e-Kuber portal-இல் விளக்கியுள்ளபடி தீர்வு செய்யப்படும்.
xi. மதிப்பும் கட்டணமும் – PSLC-ன் மதிப்பு, விற்பவரின் கணக்கில் குறைக்கப்பட்டு வாங்குபவரின் கணக்கில் கூட்டப்படும். வாங்குபவர் விற்பவருக்குச் சந்தை நிலவரப்படி கட்டணம் செலுத்தவேண்டும்.
xii. தொகுதியின் அளவு – PSLC ரூ.25 இலட்சம் மற்றும் அதன் மடங்காக இருக்கும்.
xiii. கணக்கு – PSLC வாங்குவதற்குரிய கட்டணம் “செலவாகவும்”, அதை விற்பதால் கிடைக்கும் தொகை “இதர வருமானமாகவும்” கருதப்படும்.
xiv. தெரிவித்தல் – விற்பவரும், வாங்குவோரும் PSLC-ன் (வகை - வாரியாக) விற்றல், வாங்குதலை அந்த வருடத்தின் “இருப்புநிலை அறிக்கையில் (Balance sheet) குறிப்பிட வேண்டும்.
உதாரணம்
1. வங்கி ‘A’ ரூ. 100 கோடி மதிப்புடைய PSLCஐ வங்கி ‘B’-க்கு ஜூலை 15, 2016-ல் விற்கிறது. செப்டம்பர் 30, 2016, டிசம்பர் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 அறிவிக்கை தேதிகளில் வங்கி ‘B’ ரூ. 100 கோடியை முன்னுரிமைப் பிரிவு சாதனையாக்க் காட்டலாம். வங்கி ‘A’ அதனை அதே நாட்களில் தன்னுடைய சாதனைத் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளலாம். இந்த PSLC மார்ச் 31, 2017-ல் முடிவு பெறுகிறது.
2. வங்கி ‘C’ ரூ. 100 கோடி PSLC-ல் மார்ச் 30, 2017-ல் வங்கி ‘D’-யிடமிருந்து வாங்குகிறது. மார்ச் 31, 2017-ல் வங்கி ‘D’ அதனைத் தன் சாதனை இலக்கிலிருந்து குறைத்துக்கொள்ளும். மேலும், வங்கி ‘C’ அதனைத் தன் சாதனை இலக்கில் கூட்டிக் கொள்ளும். இந்த PSLC மார்ச் 31, 2017-ல் முடிவு அடைகிறது. |