RBI/2015-16/362
DGBA.GAD No.3175/15.02.005/2015-16
ஏப்ரல் 07, 2016
தலைவர் / தலைமை நிர்வாக அதிகாரி
பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி, கிசான்
விகாஸ் பத்திரம் 2014, சுகன்யா சம்ரித்தி கணக்கு
மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் 2004
இவற்றைக் கையாளும் ஏஜென்சி வங்கிகள்
ஐயா
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியமைத்தல்
மேற்கண்ட தலைப்பில் உள்ள எங்களது சுற்றறிக்கை எண் RBI/2014-15/536, ஏப்ரல் 01, 2015 தேதியிட்டதைப் பார்க்கவும். 2016-17-ஆம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வட்டி விகிதங்களை அலுவலக ஆணை (OM) No. F. No. 1/04/2016-NS.II, மார்ச் 18, 2016 தேதியிட்டதன் மூலம் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
2. இந்தச் சுற்றறிக்கையின் விவரங்கள், அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களை அமல்படுத்துகின்ற உங்கள் வங்கியின் கிளைகளுக்குத் தேவைப்படும் நடவடிக்கையை எடுக்கும்பொருட்டு, அவர்களது கவனத்திற்குக் கொண்டுவரப்படவேண்டும். இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பயன்பெறும் வகையில் அவை உங்கள் கிளைகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்.
இங்ஙனம்
(V.S. பிரஜிஷ்)
உதவிப்பொதுமேலாளர் |